“(நன்கு)
முடிவெடுப்பவராகிய மன்னர் (அதாவது தசரதர்) மந்திரிகளோடு கூட பட்டணத்து
ஜனங்கள் போன பின்னர் அப்பொழுது மறுபடியும் (அந்த) நல்முடிவை ஆலோசனை
செய்துகொண்டார், ‘பூச (நட்சத்திரமாகிய)
நாளை என் புதல்வனை அபிஷேகம் செய்வார்கள். நாளை முதலே செந்தாமரைபோல் சிவந்த
கண்களையுடைய (ஸ்ரீ)ராமன் யுவராஜன் எனும் பிரபுத்துவம் (கொண்டவனாய்)
விளங்குவான்.’
“அப்பொழுது தசரத ராஜா உட்புறத்தில் (உள்ள)
மாளிகைக்கு போய், சாரதியிடம் (அதாவது ஸுமந்த்ரரிடம்)
இவ்வாறு ஆணையிட்டார், ‘(ஸ்ரீ)ராமனை மீண்டும் இங்கு அழைத்துவாரும்.’
“அந்த சாரதி
அந்த வாக்கியத்தை பெற்றுக்கொண்டு, (ஸ்ரீ)ராமரை
மீண்டும் அழைத்துவர சீக்கிரமாய் (ஸ்ரீ)ராமரின் பவனத்திற்கு போய்ச்
சேர்ந்தார். வாயிற்காப்பாளர்களால் (ஸ்ரீ)ராமருக்கு அவரது (அதாவது
சாரதியின்) மறுபடி வரவானது தெரிவிக்கப்பட்டது. (அதை) கேட்ட (ஸ்ரீ)ராமர்
(சாரதியின்) வருகைக்கான (காரணம் குறித்து) நிச்சயமில்லாதவராய்
ஆனார். (ஸ்ரீ)ராமர் துரிதமாய் அவரை (அதாவது ஸுமந்த்ரரை) உள்ளே
அழைப்பித்து (பின்வரும்) வார்த்தையை சொன்னார், ‘தாம்
திரும்பவும் வந்த காரியம் எதுவோ அது மீதமேதுமின்றி சொல்லும்.’
“அப்பொழுது
சாரதி அவரிடம் கூறினார், ‘ராஜா தம்மை காண இச்சிக்கிறார். தாம் (இதைக்)கேட்டு
அங்கு செல்வதற்கோ, இல்லாததற்கோ தீர்மானியும்.’
“இவ்விதமான
சாரதியின் வார்த்தையை கேட்டு, அதன்பிறகு (ஸ்ரீ)ராமர்
துரிதமாய் (சாரதியுடன்) இணைந்தவராகி நரர்களுக்கு ஈசனை (அதாவது தசரதரை)
மீண்டும் கண்டிட ராஜபவனத்திற்கு பிரயாணப்பட்டார். தசரத மன்னர் அந்த (ஸ்ரீ)ராமரின்
வரவை கேட்டு, உத்தமமான, பிரியமான (வார்த்தைகளை)
சொல்வதற்கு மாளிகைக்குள் பிரவேசிக்க அனுமதித்தார். ஸ்ரீமானான ராகவரும் (அதாவது
ஸ்ரீராமரும்) தூரத்திலிருந்தே கைகளை கூப்பியவராகி தந்தையின் பவனத்திற்குள்
பிரவேசித்து, உடனேயே
தந்தையை விழுந்து வணங்கி, கண்டார். அந்த பூமிபதி கீழே வீழ்ந்து
வணங்கிய அவரை தூக்கி, மார்போடணைத்து, இவருக்கு
சிறந்த ஆசனத்தை மீண்டும் காட்டிவிட்டு, அதன்மேல்
பேசினார், ‘(ஸ்ரீ)ராமா, நீண்ட ஆயுள் (கண்டு)
முதிர்ந்தவனாய் நானிருக்கிறேன். என்னால் விரும்பப்பட்ட போகங்கள் அனுபவிக்கப்பட்டன.
அவ்வண்ணமே அன்னங்களோடும், அநேக தட்சிணைகளோடும் (பல)நூறு
யாகங்கள் நடத்தப்பட்டது. புருஷோத்தமா, நீ எனக்கு
இஷ்டமான குழந்தை. அதனால் என்னால் உலகில் இப்பொழுது ஒப்பில்லாததான புனித
வேள்விகளும், தானங்களும், (வேதம் முதலிய
நூல்களை) நன்கு படிப்பதும் ஏற்பட்டது. நான் இஷ்டப்பட்டவாறு வீரங்களும், சுகங்களும்
அனுபவிக்கப்பட்டன. மேலும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும், அந்தணர்களுக்கும்
அவ்வாறே எனக்கும் (உள்ள) கடன்களை முடித்தவனாக இருக்கிறேன் (தேவ கடனை
வேள்விகள் மூலமும், ரிஷி கடனை
வேதம் படிப்பதன் மூலமும், பித்ரு கடனை தர்ப்பணம்-திவசம் முதலிய
காரியங்கள் மூலமும், அந்தணர்களின்
கடனை அவர்களுக்கு உணவளித்தல் மூலமும், சொந்த கடனை சுகத்தை அனுபவிப்பதன்
மூலமும் அடைக்கப்படுகின்றன). உனக்கு அபிஷேகம் செய்வதைத்தவிர வேறு எனக்கு
செய்யவேண்டியது ஏதொன்றுமில்லை. ஆதலால் நான் உனக்கு எதை சொல்லப்போகிறேனோ அதை நீ
எனக்காக செய்ய கடவாய். புத்திரா, இப்பொழுது
ஜனங்கள் எல்லோரும் உன்னை நராதிபதியாக்க இச்சிக்கிறார்கள். ஆதலால் உன்னை யுவராஜனாக
அபிஷேகம் செய்யப்போகிறேன். (ஸ்ரீ)ராமா, தவிர
கனவில் இடியுடன் கூடிய பெரும் சத்தத்துடன்
ஓர் பெரிய விண்கல் இங்கு விழுவதாகவும் இன்னும் பயங்கரமான அசுபங்களை இப்பொழுது
காண்கிறேன். (ஸ்ரீ)ராமா, ஜோதிடர்கள்
என் (ஜன்ம) நட்சத்திரமானது சூர்யன், அங்காரகன், ராகு என்கிற
பயங்கர கிரகங்களால் பீடிக்கப்படுகின்றதெனவும் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட (அபசகுண)
நிமித்தங்கள் உண்டாகும் போது பொதுவாய் மன்னனே மரணத்தையோ (அல்லது) கோரமான
ஆபத்தையோ அடைகிறான். ராகவா, என் சிந்தை பிரியாதிருப்பது எதுவரையோ
அதற்குள் (பட்டா)பிக்ஷேகம் பெற்றுவிடு. அதில்லையென்றபோதிலும்
பிராணிகளின் மதி சஞ்சலத்திற்குட்பட்டது. இன்று சந்திரன் பூசத்திற்கு முந்தைய
புனர்பூசத்தில் இருக்கிறார். ஜோதிடர்கள் பூசத்துடன் கூடிய நாளை பொருந்தியதாக
சொல்கிறார்கள். எதிரிகளை தகிக்கச்செய்பவனே, நீ
அபிஷேகிக்கப்பட வேண்டியது. என் மனமானது அங்கேயே இருப்பதாய் விரைகின்றது. உன்னை
நான் யுவராஜ்யத்தில் நான் அபிஷேகஞ்செய்கிறேன். ஆகையால் இப்பொழுது இந்த இரவு
மருமகளோடு கூடினவனாய் (அதாவது தேவி சீதையோடு கூடினவனாய்)
நீ விரதங்கொண்டு, சுயகட்டுப்பாடுடன்
தர்ப்பைப்படுக்கையில் படுத்துக்கொண்டவனாய் உபவாசம் இருப்பாய். இப்படியான
காரியங்கள் பலவித இடையூறுகளுக்கு உட்பட்டவைகளாய் இருக்கின்றன. ஆகையால் இப்பொழுது (உன்)
நண்பர்கள் விழிப்புடன் அனைத்து திசைகளிலும் ரட்சிக்கட்டும். பரதனோ
பட்டணத்திலிருந்து வெளிநாட்டில் இருக்கிறான். பிராப்தகாலமாய் இதுதானிருக்கிறது.
இதனாலேயே அப்படியிருந்தும் இப்பொழுதே உனது அபிஷேகமானது என் அனுமதிபெற்றதாகிறது. உன்
தம்பியான பரதன், மூத்தவர்களை அனுசரித்து (நடப்பவன்).
அவன் தர்மாத்மா, இரக்கமுள்ளவன், இந்திரியங்களை
வென்றவன். அவன் நல்லோரின் பாதையில் நின்றிட விருப்பங்கொண்டவன். ராகவா, நித்தமும்
தர்மவானாயிருக்கும் நல்ல மனிதர்களின் சித்தமும்
சில சமயமத்தில் தூண்டுதலால் செயல்பாடுடையது. ஆயினும், இதுவே என்
எண்ணம்.’
“நாளையதினம் நடக்கப்போகிற அபிஷேக
விஷயத்தில் இவ்விதம் சொல்லப்பெற்றவராய் அந்த (ஸ்ரீ)ராமர்
‘திரும்பிச்
செல்லலாம்’ என்று
விடைபெற்றவராகி தந்தைக்கு அபிவாதனம் (அதாவது நமஸ்காரம்)
செய்து (தன்) மாளிகைக்கு திரும்பினார். அவர் ராஜாவால் அந்த
அபிஷேகத்தைப்பற்றி சொல்லப்பட்ட (பின்னர்), தனது
வசிப்பிடத்தில் பிரவேசித்த உடனேயே, வெளிக்கிளம்பி
தாயின் அந்தப்புரத்திற்கு போய்ச் சேர்ந்தார். அங்கு தேவாலயத்தில் அந்த தாயாரை, பட்டாடை
உடுத்திக்கொண்டு தியானத்தில் இருப்பவராய், மௌனமாய்
மகாலக்ஷ்மியை பிரார்த்தித்துக்கொண்டிருப்பவராய் கண்டார். (ஸ்ரீ)ராமரின்
அபிஷேகம் (என்கிற) பிரியமான (செய்தி) கேட்டதுமே, வந்து
சேர்ந்திருந்த (லக்ஷ்மணரின் தாயாரான) ஸுமித்ராவும், அழைத்து
வரப்பட்டவர்களாகிய (தேவி) சீதாவும், லக்ஷ்மணரும்
அங்கு முன்னரே (வந்திருந்தனர்). அந்த காலத்தில் (ஸ்ரீராமரின்
தாயாரான) கௌசல்யா (லக்ஷ்மணரின் தாயாரான) ஸுமித்ராவாலும், (தேவி)
சீதாவாலும், லக்ஷ்மணராலும் பணிவிடை
செய்யப்பெற்றவளாய் மூடிய விழிகளுடன் இருந்தாள். புத்திரனுடைய பூச (நட்சத்திரத்தில்)
யுவராஜ்ய பட்டாபிஷேகத்தை கேள்வியுற்று, புருஷரான
ஜனார்தனரை (அதாவது மகாவிஷ்ணுவை) பிராணாயாமம் செய்து (அதாவது
குறிப்பிட்ட இடைவெளியில் மூச்சை அடிக்கி) தியானித்தாள். அந்த (ஸ்ரீ)ராமர்
அப்படியாய் குறையற்றவண்ணமாய் நியமத்துடன் இருக்கும் அவளை அணுகி, அபிவாதனம்
செய்து (அதாவது நமஸ்கரித்து) களிப்புறச் செய்கின்றவராய் (பின்வரும்)
வார்த்தையை சொன்னார், ‘அம்மா, தந்தையால்
பிரஜைகளை பரிபாலிக்க வேண்டிய கர்மத்தில் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். என்
தந்தையின் சாசனத்தின்படி எனக்கு பட்டாபிஷேகம் நாளை நடக்கப்போகிறது. ரித்விக்குகள், உபாத்யாயர்களோடு
கூட இருந்த தந்தையார் என்னிடம் இன்னுமிப்படியாய் கூறினார். இந்த இரவு (தேவி)
சீதாவோடு கூடவே என்னால் உபவாசிக்க வேண்டியது. நாளை நடைபெறப்போகிற இந்த
அபிஷேகத்தில் மங்கலமானவைகளும், யோக்கியமானவைகளும்
எவை எவையோ அவையெல்லாவற்றையும் இப்பொழுது வைதேஹிக்கும் (அதாவது தேவி
சீதாவிற்கும்), எனக்கும் செய்தருள்வீராக.’
“கௌசல்யா, வெகு காலம்
எதிர்பார்த்திருந்த இந்த வாக்கியத்தை கேட்டு, ஆனந்தக்கண்ணீருடன்
(ஸ்ரீ)ராமரிடம் இவ்விதம் சொன்னாள், ‘குழந்தாய் (ஸ்ரீ)ராமா, சிரஞ்சீவியாய்
இரு. உனது எதிரிகள் அழியட்டும். நீ வளங்களுடன் சேர்ந்தவனாய் என்னையும், (லக்ஷ்மணரின்
தாயாரான) ஸுமித்ராவையும், சுற்றத்தினரையும் ஆனந்தத்தில்
வைப்பாயாக. புத்திரா, ஆஹா, நல்ல
நட்சத்திரத்தில் நீ என்னிடத்திலிருந்து பிறந்திருக்கிறாய் அதனால் தான் தந்தையான
தசரதர் உனது (உத்தம) குணங்களால் சந்தோஷம்
செய்விக்கப்பட்டிருக்கிறார். புத்திரா, என்னொரு
ஆனந்தம், இக்ஷ்வாகு
ராஜ்யலக்ஷ்மியானவள் எவளோ அவளும் உன்னிடம் அடைக்கலம் புகப்போகிறாள். தாமரை இதழ்
போன்ற கண்களையுடைய புருஷர் விஷயத்தில் (அதாவது மகாவிஷ்ணு
விஷயத்தில்) எனது பொறுமையான (விரதங்கள்) வீணாகவில்லை.’
“தாயால்
இவ்விதம் சொல்லப்பட்ட (ஸ்ரீ)ராமர் பணிவுடன்
கைகூப்பியவண்ணம் உட்கார்ந்திருக்கிறவருமாகிய தம்பியை நோக்கி, புன்னகையுடன்
இவ்வாறு பேசினார, ‘லக்ஷ்மணா, இந்த (ராஜ்ய)லக்ஷ்மியானவள்
எனது இரண்டாம் அந்தராத்மாவாகிய உனக்கு சொந்தமானவள். நீ இந்த வஸுந்தராவை (அதாவது
பூமியை) என்னோடு கூட பரிபாலனம் பண்ணுவாய். சௌமித்ரா (அதாவது லக்ஷ்மணா), அரசின்
பயன்களாய் இஷ்டமான போகங்களை நீயே அனுபவி. ராஜ்யத்தையும், உயிர்வாழ்வையும்
உன் பொருட்டே விரும்புகிறேன்.’
“(ஸ்ரீ)ராமர்
இவ்விதம் லக்ஷ்மணரிடம் சொல்லியபின், தாய்மார்களிருவருக்கும்
அபிவாதனம் செய்தும், (தேவி) சீதாவுடன் செல்ல அனுமதி வாங்கி, தன்
வசிப்பிடத்திற்கு சென்றார்.”
No comments:
Post a Comment