“மகாதேஜஸ்வியானவரும், தவத்தால் மிக பிரகாசமாய் இருக்கும் ஒளியுடையவரும், மகாதபஸ்வியும் கௌதமருடைய மூத்த புதல்வருமான ஷதானந்தர், அந்த அறிஞரான விஷ்வாமித்ரருடைய அந்த வார்த்தையை கேட்டு, மிகவும் ஆச்சர்யத்தை அடைந்தார். (ஸ்ரீ)ராமரை காண்கையிலேயே மகிழ்ச்சியினால்
மயிர்க்கூச்சமடைந்தார். அந்த ஷதானந்தர் அமர்ந்து சுகமாய் வீற்றிருக்கும்
அவ்விரண்டு அரசகுமாரர்களை பார்த்துவிட்டு, பிறகு
முனிவர்களுள் சிறந்தவரான விஷ்வாமித்ரரிடம் கூறினார், ‘முனிவர்களுள் புலியே, புகழ்பெற்ற
நெடுங்காலம் தவத்தை அடைந்தவளான எனது அந்த தாய் (அதாவது அஹல்யா) ராஜகுமாரருக்கு காண்பிக்கப்பட்டார்களா? மகாதேஜஸுடையவரே, யஷஸ்வினியான
என் தாய், எல்லா பிராணிகளுடைய பூஜைக்கும் உரிய (ஸ்ரீ)ராமரிடத்தில்
காட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பூஜை செய்தார்களா? மகாதேஜஸ்வியே, என்
தாயாருக்கு விதிவசத்தால் நேர்ததும், முற்காலத்தில்
நடந்ததான விஷயங்களெல்லாம் (ஸ்ரீ)ராமருக்கு
சொல்லப்பட்டதா? முனிவர்களுள் சிறந்தவரே, கௌஷிகரே, தமக்கு மங்கலம் உண்டாகுக. என் தாய் (ஸ்ரீ)ராமரின் தரிசனத்தை பெற்றது முதற்கொண்டே என்
குருவுடன் (அதாவது தந்தையுடன்) கூடி வாழ்கிறார்களா? குஷிக புத்திரரே, வந்திருக்கும்
மகாதேஜஸ்வியாகிய (ஸ்ரீ)ராமர், என் குருவாலே பூஜிக்கப்பட்டாரா? மகாத்மாவினுடைய பூஜையை ஏற்றுக்கொண்டாரா? குஷிக புத்திரரே, என் குரு
இவ்விடத்தில் வந்திருக்கும்,
பூஜிக்கப்பட்டவரான (ஸ்ரீ)ராமரால் சாந்தமான மனமுடையவராய் அபிவாதனம் (அதாவது
வணக்கம்) செய்தாரா?’
“அவருடைய அந்த வார்த்தையை கேட்டு, (முதுமொழி)
வாக்கியங்களை அறிந்தவரான மகாமுனி விஷ்வாமித்ரர் வாக்கியங்களின் பொருளை அறிந்தவரான
ஷதானந்தரிடம் மறுமொழியுரைத்தார், ‘முனிவர்களுள் சிறந்தவரே, செய்யவேண்டியது எதுவோ அது தப்பிவிடவில்லை. என்னால்
முற்றிலும் செய்து முடிக்கப்பட்டது. பார்கவருடன் (அதாவது ரிஷி ஜமதக்னியுடன்) ரேணுகா(தேவி)
எவ்வண்ணமோ அவ்வண்ணமே (கௌதம) முனிவரோடு
பத்தினி கூடியிருந்து வாழ்ந்து வருகிறாள்.’
“அந்த அறிஞரான விஷ்வாமித்ரருடைய அந்த வார்த்தையை கேட்டு, மகாதேஜஸ்வியான ஷதானந்தர், (ஸ்ரீ)ராமரிடம் (பின்வரும்) வார்த்தையை சொன்னார், ‘நரர்களுள் சிறந்தவரே, ராகவா, தமது வரவு நல்வரவாகுக. வெல்லமுடியாத மகரிஷி விஸ்வமித்ரரை
முன்னிட்டுக்கொண்டு (தாம் இங்கு)
வந்திருப்பது என்பது எங்கள் அதிர்ஷ்டமே. விஷ்வாமித்ரர் சிந்தைக்கு அப்பாற்ப்பட்ட
செயல்களையுடையவர். தவத்தால் பிரம்மரிஷியானவர். இணையில்லா ஒளியுடன் விளங்கும்
மகாதேஜஸ்வி. இவரே பரமகதி என்று அறிந்துகொள்வீர். (ஸ்ரீ)ராமா, மகத்தான தவம் புரியப்பட்டது எவராலோ அந்த குஷிகபுதல்வர் (அதாவது விஷ்வாமித்ரர்) தமக்கு காப்பாளர்.
தம்மைக்காட்டிலும் அதிக பாக்கியசாலி புவியில் வேறு ஒருவரும் கிடையாது. மகாத்மாவான
கௌஷிகருடைய பலம் எப்பேர்ப்பட்டது என்பதை நான் உரைக்கிறேன்; கேட்கப்படட்டும். அதை நடைபெற்றது எவ்வண்ணமோ, அவ்வண்ணமே உரைக்கும் என்னை கேட்பீராக. இந்த தர்மாத்மா (அதாவது விஷ்வாமித்ரர்) நெடுங்காலம் தர்மங்களை அறிந்து, எதிரிகளை அடக்கி, வித்தைகளை
அறிந்தவராயும், பிரஜைகளின் நலத்தில் ஈடுபாடுள்ள ராஜாவாய் இருந்தார்.
பிரஜாபதியின் (அதாவது பிரம்மாவின்)
புத்திரரான குஷன் என்ற பெயர்பெற்றவர் மஹீபதியாக (அதாவது அரசராக) இருந்தார்.
குஷருடைய புத்திரர் பலவானும், நல்தார்மிகருமான
குஷநாபர். குஷநாபரின் புதல்வரான காதி என்றவர் பிரசித்திபெற்றவராக இருந்தார்.
மகாதேஜஸ்வியும்,
மகாமுனியுமான
விஷ்வாமித்ரர் காதியின் புத்திரர். மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் ராஜாவாய் மேதினீயை
(அதாவது பூமியை) பரிபாலித்து
வந்தார். பல்லாயிரமாண்டு ராஜ்யத்தை ஆண்டுவந்தார். ஓர் சமயம் மகாதேஜஸ்வியானவர் (அதாவது
விஷ்வாமித்ரர்) சேனையை ஒன்றிணைத்து, அக்ஷெளஹிணீ (21,870
ரதங்கள்;
21,870 யானைகள்; 65,610 குதிரைகள்;
1,09,350 காலாட்படைகள்)
சேனையுடன் சூழப்பட்டவராய் பூமியை சுற்றிவந்தார். (ஸ்ரீ)ராமா, நகரங்களிலும், நாடுகளிலும், நதிகளிலும், மலைகளிலும், ஆசிரமங்களிலும் ஒன்றின் பின் ஒன்றாக சஞ்சரித்தவரும்
வெற்றியாளர்களில் சிறந்தவரும், மகாபலவானுமாகிய
விஷ்வாமித்திரர்,
பலவித
பூக்களும்-பழங்களும் நிறைந்ததாய், பற்பல
மிருகக்கூட்டங்களால் நிறைந்ததாய், சித்தர்களாலும்-சாரணர்களாலும்
சேவிக்கப்பட்டதாய்,
தேவர்கள்-தானவர்கள்-கந்தர்வர்களோடும், கின்னரர்களோடும் விளங்குகிறதாய், அமைதியான மான்களால் நிறையப்பெற்றதாய், த்விஜ (த்விஜர்
என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான
முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது)
சங்கத்தினர்களால் சேவிக்கப்பட்டதாய், பிரம்மரிஷி
கூட்டங்களால் நிறம்பியதாய்,
தேவரிஷி கூட்டங்களால்
சேவிக்கப்பட்டதாய்,
புராணகாலங்களை (கண்டவர்களும்), (ஓயாமல்) தவம் புரிகிறவர்களும், (தவங்களின்) சித்திகளை
பெற்றவர்களும், அக்னிக்கு ஈடான மகாத்மாக்களாலேயும், வாலகில்ய (ரிஷிகளாலும்), வைகானச (முனிவர்களாலும்), இன்னும் பிறரான நீரையே உணவாய் உடையவர்களும், வாயுவை (மட்டுமே)
புசிப்பவர்களும்,
(இலை) சரகுகளையே உணவாயுடையவர்களும், பழங்களையும்-கிழங்குகளையும் (மட்டுமே) புசிப்பவர்களும், உள்ளடக்கமுடையவர்களும், கோபத்தை
அடக்கியவர்களும்,
இந்திரியங்களை
வென்றவர்களும், ஜபத்திலும்-ஹோமத்திலும் ஊக்கமுடையவர்களான ரிஷிகளாலும், அனைத்து வகையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்த வசிஷ்டருடைய
ஆசிரமபதத்திற்கு வந்தார். வசிஷ்டரின் ஆசிரமபதம் மற்றோர் பிரம்மலோகம் போன்றிருப்பதை
கண்டார்.’”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்தோராவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment