“(ஸ்ரீ)ராமா, (தேவி) திதி அந்த (தன்) புத்திரர்கள்
மரிக்கப்பட்டவளவில் வெகு துக்கமடைந்தவளாய் கணவரான, மரீசி புத்திரரான (மகரிஷி) காஷ்யபரிடம் இவ்விதம் சொன்னாள், ‘பகவானே, மகாபலசாலிகளான தம்முடைய புத்திரர்களாலேயே (என்) புதல்வர்கள் மாண்டவளாக ஆயிருக்கிறேன்.
நெடுந்தவத்தாலே கிடைப்பவனான ஷக்ரனை (அதாவது இந்திரனை) கொல்பவனான (ஓர்)
புத்திரனை (பெற) இச்சைகொள்கிறேன். அப்படியான நான் தவம் புரிகிறேன். எனக்கு
கர்பத்தை அளிக்க கடவீர். பலமுடையவனாய், பெரும் வில்லாளியாய், நிலையான உணர்வுடையவனாய், சம (அதாவது
பாகுபாடற்ற) பார்வையுடையவனான இப்பேர்ப்பட்ட ஷக்ரஹந்தனை (அதாவது இந்திரனை
கொல்பவனை) தாம் அனுக்கிரகித்து அருளக்கடவீர்.’
“அப்போது மகாதேஜஸுடைய
மரீசிபுத்திரரான காஷ்யபர்,
அவளுடைய அந்த வார்த்தையை
கேட்டு, மிகவும் துக்கமுற்றவளான திதியிடம் மறுமொழியுரைத்தார், ‘தவத்தை தனமாய் கொண்டவளே, இப்படியே
ஆகட்டும். உனக்கு மங்கலம் உண்டாகட்டும். நீ யுத்தத்தில் ஷக்ரனை (அதாவது இந்திரனை) கொல்லக்கூடியவனான புத்திரனை
பிறப்பிப்பாய். தூய்மையாய் இரு. ஆயிரம் வருடம் முடிவடையும்வரையில் தூய்மையாகவே
இருப்பாயானால், நீ என்னிடத்திலிருந்து மூவுலகத்திற்கும் பதியான புத்திரனை
பெறுவாய்.’ அந்த மகாதேஜஸ்வி (அதாவது காஷ்யபர்) இவ்விதம் சொல்லிவிட்டு அவளை தம்
கையினால் தடவிக்கொடுத்தார். அவளை (அவ்விதம்) தொட்டுவிட்டு அதன்பின் ‘ஸ்வஸ்தி (அதாவது
நலமுண்டாகுக)’ என்று சொல்லிவிட்டு, அவர்
தவம்செய்வதற்காக சென்றுவிட்டார்.
“நரர்களுள் சிறந்தவனே (அதாவது ஸ்ரீராமா), அவர்
சென்றபின், (தேவி)
திதி மிகவும் சந்தோஷமடைந்து குஷப்லவனத்திற்கு வந்துசேர்ந்து மிகவும் கடுமையான
தவத்தை புரிந்தாள். நரர்களுள் சிறந்தவனே, அவள் தவம்
புரிந்துகொண்டிருக்கும் பொழுதே சஹஸ்ராக்ஷன் (அதாவது ஆயிரங்கண் கொண்டவன் என்றும் பொருள்; தேவேந்திரனைக்
குறிக்கும்) ஏராளமான குணவிசேஷங்களுடன் (அவளுக்கு) பணிவிடையை
செய்துவந்தார். சஹஸ்ராக்ஷன் அக்னியையும், தர்ப்பைகளையும், விறகையும், நீரையும், பழத்தையும், அப்படியே
கிழங்கையும், வேறு கோரப்பட்டது எதுவோ அதையும் (கொண்டுவந்து) சமர்ப்பித்தார். இதற்குமேலும், ஷக்ரன் உடம்புபிடித்துவிடும் காரியங்களினாலும், சிரமங்களை தீர்த்துவைக்கும் உபசாரங்களாலும் (தேவி) திதிக்கு அனைத்து காலங்களிலும் ஊழியம்
செய்துவந்தார்.
“ரகுநந்தனா, ஆயிரம் வருடத்திற்கு பத்து வருடம் குறைவான நிலையில் (தேவி) திதி மிகவும் சந்தோஷித்தவளாய் சஹஸ்ராக்ஷனை நோக்கி
இவ்வாறு சொன்னாள்,
‘சுரர்களில் (அதாவது தேவர்களில்) சிறந்தவனே, புதல்வனை உத்தேசித்து (என்னால்) யாசிக்கப்பட்ட மகாத்மாவான உன் தந்தையால்
ஆயிரவருடங்கள் முடிவில் எனக்கு வரம் கொடுக்கப்படும். வீர்யமுடையவர்களில் சிறந்தவனே, உனக்கு மங்கலம் உண்டாகட்டும். குறைவாயிருக்கும் பத்து
வருடங்கள் (நான்) தவம்
புரிந்துகொண்டிருக்கவே அதற்குமேல் தம்பியை பார்ப்பாய். வெல்வதிலேயே நோக்குடைய
அப்புத்திரனை உன்பொருட்டே நான் உருவாக்கி வருகிறேன். மூவுலகையையும் ஜயித்திடும் (அந்த)
புத்திரனை கவலையின்றி கூட அனுபவிப்பாய்.’
“இவ்விதமாக தேவி திதி ஷக்ரனிடம் சொல்லிவிட்டு, திவாகரன் (அதாவது
சூர்யன்) (ஆகாயத்தின்) மத்தியில் வந்ததுமே, தூக்கத்தால் (தன்) பாதங்களில் தலை படும்படி வைத்துக்கொண்டு நினைவிழந்தாள். தலையின்மீது
பாதங்கள் வைக்கப்பட்டிருப்பதையும், பாதங்களில்
தலைமுடி பட்டுக்கொண்டிருப்பதையும், தூய்மையற்றவளாய்
இருக்கும் அவளையும் பார்த்து ஷக்ரன் சிரித்தார், மகிழ்வடைந்தார்.
(ஸ்ரீ)ராமா, பரமாத்மாவான புரந்தரன் (அதாவது இந்திரன்), அவளுடைய
சரீரத்தின் யோனி (வழியே) பிரவேசித்தார், கருவையும் ஏழு துண்டாக எண்ணம்கொண்டார். (ஸ்ரீ)ராமா, நூறு
கணுக்களை உடைய வஜ்ரத்தால் பிளக்கப்பட்ட உடனே கர்ப்பமானது நல்ல குரலுடன் அழுதது.
அதன்பேரில் திதியும் விழித்துக்கொண்டாள். ஷக்ரன் ‘மா ருத, மா ருத (அதாவது
அழாதே, அழாதே என்று
பொருள்)’ என்று கர்ப்பத்திடம் சொன்னார். அதற்குமேல் மகாதேஜஸ்வியான
வாசவன் (அதாவது இந்திரன்)
அழுக்கொண்டிருக்கும் பிளந்தார். (தேவி) திதி ‘கொன்றிடவேண்டாம், கொன்றிடவேண்டாம்’ என்று இவ்வாறு சொன்னாள். உடனே ஷக்ரனும் தாயின் வார்த்தையை
கௌரவிக்க வெளியில் குதித்தார். வஜ்ராயுதத்துடன் கூடினவராய் ஷக்ரன் கைகளை
குவித்துக்கொண்டு திதியிடம் விண்ணப்பம் செய்தார், ‘தேவி, பாதங்களில் மீது தலைமுடி படும்படியாய் வைத்துக்கொண்டு
சுத்தமற்றவளாய் தூங்கினார். அந்த வாய்ப்பை நான் பெற்றுக்கொண்டு, தேவியே, போரில் ஷக்ரஹந்தனை (அதாவது இந்திரனை கொல்பவனை) ஏழுதுண்டமாக
பிளந்துவிட்டேன். எனது இச்(செயலை) தாம் மன்னிக்கக்கடவீர்.’”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்தாறாவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment