Saturday, February 22, 2020

நாற்பத்திமூன்றாவது ஸர்க்கம் – கங்காவதரணம்

(கங்காவதரணம்)

(மாமல்லபுரத்தில் பகீரத தவ சிற்பம்)

(ஸ்ரீ)ராமா, அந்த தேவதேவர்கள் சென்றவளவில் அவர் (அதாவது பகீரதன்) பூமியை கட்டைவிரல் நுணியால் தொடப்பட்டதாய் செய்து, கைகளை உயரத்தூக்கினவராய், பிடிப்பில்லாதவராய், காற்றை புசிப்பவராய், தனியாய், இரவும் பகலும் கம்பம் போன்று அசைவற்று, கட்டுப்பாடின்றி நின்றுகொண்டு ஓர் வருடம் உபாசித்தார். பிறகு (ஓர்) வருடம் நிரம்பினவளவில் அனைத்து உலகத்தாராலும் வணங்கப்பட்ட உமாபதியான பஷுபதி (அதாவது சிவபெருமான்) ராஜாவிடம் இவ்விதம் சொன்னார், ‘நரர்களுள் சிறந்தோனே, உன்னிடம் நான் பிரீதியடைந்தேன். உன்னுடைய பிரியத்தை செய்கிறேன். சைலராஜனின் மகளை நான் சிரஸில் தாங்கிக்கொள்கிறேன். பிறகு அனைத்து உலகத்தாராலும் மூத்த ஹைமவதியான (அதாவது இமயத்தின் குமாரியான) அந்த கங்கா அப்பொழுது மகத்தான ரூபத்தையும், சகிக்கமுடியாத வேகத்தையும் செய்துகொண்டு, ஆகாயத்திலிருந்து மங்கலகரான சிவனாரின் சிரஸில் இறங்கினாள். தாங்க மிகவும் கடினமான அந்த கங்கா தேவி நானே வெள்ளத்துடன் சங்கரரை எடுத்துக்கொண்டு, பாதாளத்தை பிரவேசிக்கிறேன் என்ற சிந்தைகொண்டாள். பகவானான, முக்கண்ணனான ஹரனும் அவளுடைய செருக்கை அறிந்து, கோபங்கொண்டவராய் அப்பொழுது (அவளை) மறைத்திட முடிவு செய்தார். (ஸ்ரீ)ராமா, புண்ணியமானவள் (அதாவது கங்கை) அவள் புண்ணியமான, இமயமலைக்கு ஒப்பான, ஆழமான ஜடாமண்டலம் உடைய அந்த ருத்திரனின் தலையில் விழுந்தாள். அவள் பூமியை எவ்விதமாவது அடைய யத்தனம் செய்தும் முடியவில்லை. அவள் ஜடாமண்டலத்தில் சுழன்றவளாய் வெளியேறுவதை அடையவில்லை. (கங்கா) தேவி அங்கேயே அநேக வருடக்கணக்காக சுழன்றுகொண்டிருந்தாள். அவளை மறுபடியும் அங்கே காணாதவராய் (பகீரதன்) சிறந்த தவத்தை புரிந்தார். ரகுநந்தனா, ஹரன் அதனாலே சந்தோஷித்தவராய் ஆனார். அவரும் பின்னர் பிந்துஸரஸ்ஸை நோக்கி கங்கையை விட்டார்.

வெளியிடப்பட்ட அவளிடத்தில் ஏழு பிரவாகங்கள் உண்டாயின. ஹ்லாதினியும், பாவனியும் அப்படியே இதர நளினியும், மங்கலநீரான, சுபமான மூன்று கங்கைகள் கிழக்கு திசையை நோக்கி செல்கின்றன. மகாநதியான சுசக்ஷுவும், சீதையும், சிந்துவும் இந்த மூன்றுகளும் சுபநீர் உடையதாய் மேற்கு திக்கை நோக்கி சென்றன. பிறகு அவைகளில் ஏழாவதோ பகீரத மன்னனை பின்தொடர்ந்தது. மகாதேஜஸ்வியான, ராஜரிஷியான பகீரதனும் திவ்யமான ரதத்தில் ஏறியவராய் முன்செல்ல, கங்கையும் அவரை பின்தொடர்ந்தாள். ஆகாயத்திலிருந்து சங்கரரின் சிரஸையும் பின் தரணியை அடைந்தவளாய், அங்கு தீவிரமான சத்தத்தோடு கூடிய ஜலத்தை பரப்பினாள். பூமியில் விழுகிற (கங்கை) மீன்கள், ஆமைகள் இவைகளின் கூட்டங்களாலும், முதலைகளின் கணங்களாலும் விழுந்த இதரங்களாலும் அப்படியே ஒளிர்ந்தது. அப்பொழுது தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், யட்ச-சித்த கணங்கள், ஆகாயத்திலிருந்து பூமியை அவ்விதம் அடைந்த அவரை அங்கு அப்பொழுது பார்த்தார்கள். நகரத்திற்கு ஒப்பான விமானங்களோடும், பரபரப்புள்ள குதிரைகளோடும் அப்படியே சிறந்த வேழங்களோடும் தேவர்கள் அங்கு விசேஷமாய் வந்து நின்றார்கள். உலகில் யாவருக்கும் அற்புதமான, உத்தமமான அந்த கங்கையின் கீழிறங்குதலை பார்க்க ஆசைகொண்டவர்களான, அளவற்ற தேஜஸுள்ள தேவகணங்கள் ஒன்றுசேர்ந்தார்கள். ஒன்றுசேர்ந்திருக்கிற சுரகணங்களாலும் (அதாவது தேவகணங்களாலும்) அவர்களுடைய ஆபரணகாந்தியாலும் மேகமில்லாத ஆகாயம் நூறு சூரியனை உடையதுபோல் விளங்குகிறது.

துள்ளுகிற முதலை, சர்ப்பம் இவைகளுடைய கூட்டங்களாலும், மீன்களாலும், நட்சத்திரங்களாலும் அப்பொழுது ஆகாயம் மின்னற்கொடி போன்று விளங்கிற்று. எங்கும் பரவுகின்ற நீரின் நுரைகளால், வெள்ளையான அன்னப்பறவைகளின் கூட்டங்களால் இலையுதிர் காலத்து மேகம் போன்று ஆகாயம் வியாபிக்கப்பட்டது. சிவவிடங்களில் வெகு வேகமாகவும், கோணலாகவும்; சிலவிடங்களில் நேராகவும் சென்றது. சிலவிடங்களில் கீழே விழுந்ததாகவும், உயர எழும்பினதாகவும்; சிலவிடங்களில் மெல்ல மெல்லவும் சென்றது. சிலவிடங்களில் அடிக்கடி ஜலத்தால் எதிர்த்து மோதுகிற ஜலமும் உயரகிளம்புவதை அடைந்து, மறுபடியுமே தரையில் விழுந்தது. விஷ்ணுபாதத்திலிருந்து கிளம்பி இந்து மண்டலத்தை (அதாவது சந்திர மண்டலத்தை) தாண்டி, சங்கரரின் சிரஸிலிருந்து நழுவி மறுபடி பூமியில் குதித்த அந்த நீர் அப்பொழுது நிர்மலமாகவும், களங்கத்தை போகடிப்பதாகவும் விளங்கிற்று.

(சந்திர மண்டலம்)

வஸுதாதளத்தில் (அதாவது பூமியில்) வசிப்பவர்கள், தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள் அங்கு பவனின் (அதாவது பரமசிவனின்) அங்கத்திலிருந்து விழுந்த நீரை பவித்திரமானது என்று தொட்டனர். எவர்கள் சாபத்தால் ஆகாயத்தினின்று வஸுதாதளத்தில் வீழ்ந்தார்களோ அவர்கள் அதில் குளியல் செய்து, களங்கம் விலகியவராய் ஆனார்கள். அதிகமாய் ஒளிரும் அந்த நீரால் மறுபடியும் பாவம் நீங்கியவர்களாய், பிறகு மறுபடியும் ஆகாயத்துள் புகுந்து, தங்கள் உலகங்களை அடைந்தார்கள். உலகம் ஒளிரும் அந்த நீரால் உள்ளம் குளிர்ந்ததாய் களித்தது. கங்கையில் குளியல் செய்ததாய் களைப்பு நீங்கியதாய் ஆனாது. மகாதேஜஸ்வியான, ராஜரிஷியான பகீரதனும், திவ்யமான ரதத்தில் ஏறியவராய் முன் சென்றார். கங்கை அவரின் பின்தொடர்ந்தாள்.

(மாமுனி ஜஹ்னு கங்கையை முழுமையாய் அருந்திய பொழுது)

(ஸ்ரீ)ராமா, எல்லா ரிஷிகணங்களோடு கூடிய தேவர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள், மகாநாகர்கள் இவர்களோடு கூடின கந்தர்வர்கள், யட்சர்கள் இவர்களில் சிறந்தவர்கள், எல்லா அப்சரஸ்களும், எவர்கள் நீர்வாழுயிர்களோ அவர்கள் எல்லோரும் பகீரதனுடைய ரதத்தை பின்தொடர்கிறவர்களாய், பிரீதிகொண்டவர்களாய் கங்கையை தொடர்ந்தார்கள். ராஜா பகீரதன் எங்கோ அங்கே புகழ்பெற்ற நதிகளுள் சிறந்த, அனைத்து பாவங்களையும் போக்கடிக்கிற கங்கை சென்றாள். பிறகு, அற்புத கர்மமுடைய, யஜமானரான (அதாவது யாகம் செய்பவரான), மகாத்மாவான (மாமுனிவர்) ஜஹ்னுவுடைய யாகக்ஷேத்திரத்தையே கங்கை மூழ்கச்செய்தாள். ராகவா, அவளுடைய செருக்கை அறிந்து, ஜஹ்னுவும் கோபங்கொண்டவராய் கங்கையினுடைய எல்லா ஜலத்தையும் வெகு அற்புதமாய் குடித்துவிட்டார்.

பிறகு, வெகு வியப்புற்ற கந்தர்வர்களோடு கூடின தேவர்களும் ரிஷிகளும், மகாத்மாவான, புருஷர்களுள் உத்தமரான ஜஹ்னுவை பூஜித்தார்கள். கங்கையையும் (அந்த) மகாத்மாவிற்கு மகளாவதை நோக்கி இட்டுச்சென்றார்கள். பிறகு, (அந்த) மகாதேஜஸ்வி சந்துஷ்டராய் இரண்டு காதுகளிலிருந்து (கங்கையை) மறுபடியும் வெளிப்படுத்தினார். அதனால் ஜஹ்னுவின் மகளான கங்கா ஜாஹ்னவீ என்றும் சொல்லப்படுகிறாள். கங்கா மறுபடியும் பகீரதனை தொடர்ந்தவளாய் சென்றாள். நதிகளில் சிறந்த அவள் சமுத்திரத்தையும் அடைந்தாள். அப்பொழுது அவருடைய (அதாவது பகீரதனுடைய) கர்மத்தை சித்திக்க வைப்பதன் பொருட்டு ரஸாதலத்தை அடைந்தாள். ராஜரிஷியான பகீரதனும் முயற்சித்து கங்கையை கொண்டுவந்து, பிதாமகர்களை (அதாவது பாட்டனார்களை) சாம்பலாயிருக்கிறவர்களாய் மனம் தளர்ந்தவராய் பார்த்தார். பிறகு, சாம்பல் குவியலை அந்த உத்தமமான கங்காஜலம் முழுகச்செய்தது. ரகுவம்சத்தவரில் உத்தமா (அதாவது ஸ்ரீராமா), பாவங்களிலிருந்து விடுபெற்றவர்களாய் (அந்த அறுபதாயிர ஸகரபுத்திரர்களும்) ஸ்வர்கம் அடைந்தார்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்திமூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment