Monday, January 13, 2020

இருபத்தி ஏழாவது ஸர்க்கம் – அஸ்திர உபதேசம்



பிறகு பெரும் புகழ்பெற்ற விஷ்வாமித்ரர், அந்த இரவை கழித்து, புகழ்ந்து ராகவரிடம் மதுரமான குரலோடுகூடிய வாக்கியத்தை சொன்னார், ‘பெரும் புகழ்பெற்ற ராஜபுத்திரா, உனக்கு மங்கலம் உண்டாகுக. சந்தோஷமடைந்தவனாக இருக்கிறேன். வெகு பிரீதியோடு கூடிய (நான்) அனைத்து அஸ்திரங்களையும் கொடுக்கிறேன். இந்த அவைகளால் கந்தர்வர்கள், உரகர்களோடு கூடினவர்களையும், தேவர்கள் (மற்றும்) அசுர கணங்களையும், பகைவர்களையும் வலுக்கட்டாயமாக அடக்கி போரில் ஜயம் கொள்வாய். உனக்கு அதனால் மங்கலம் உண்டாகும் ராகவா! அந்த திவ்ய அஸ்திரங்களை அனைத்துவிதமாகவும் கொடுக்கிறேன். மகத்தான திவ்ய தண்டசக்கிரத்தை உனக்கு கொடுக்கப்போகிறேன்.

வீரா, இன்னும் தர்மசக்கிரத்தையும் அப்படியே காலசக்கிரத்தையும் அப்படியே அதி உக்கிரமான விஷ்ணுசக்கிரத்தையும் அப்படியே இந்திர அஸ்திரத்தையும், நரர்களில் சிறந்தவனே, வஜ்ர அஸ்திரத்தையும், சிவனது பாஷுபத அஸ்திரத்தையும், பிரம்மஷிர அஸ்திரத்தையும் அப்படியே ஐஷீகாஸ்திரத்தையும், மகத்தான திவ்யமான தேவசக்கிரத்தையும் உனக்கு கொடுக்கிறேன்; ராகவா, பெரும் கரம் கொண்டவனே, ஒப்புயர்வில்லாத பிரம்மாஸ்திரத்தை உனக்கு கொடுக்கிறேன்.

நரர்களுள் புலியே, அரசகுமாரா, காகுத்ஸதா, மோதகீ (மற்றும்) ஷிகரீ என்று இரண்டு கதைகள்; ஒளிருபவைகளான இரண்டையுமே கொடுக்கிறேன். (ஸ்ரீ)ராமா, மகத்தான தர்மபாஷத்தையும் (அதாவது தர்ம சுருக்குகயிற்றையும்) இன்னும் காலபாஷத்தையும், வெகு உத்தமமான வாருண பாஷத்தையும், அஸ்திரத்தையும் நான் கொடுக்கிறேன். ரகுநந்தனா, சுஷ்கம் (மற்றும்) அர்த்ரம் என்கிற இரண்டு அஷனி (அதாவது இடி அஸ்திரங்களை) கொடுக்கிறேன். பினாக அஸ்திரத்தையும், நாராயண அஸ்திரத்தையும் அப்படியே கொடுக்கிறேன். பாவமற்றவனே, (ஸ்ரீ)ராமா, பெயரினால் ஷிகரம் என்றும் ஆக்னேயமென்றும் பிரியமான அஸ்திரத்தையும், பிரதனம் என்ற வாயவ்யாஸ்திரத்தையும் உனக்கு கொடுக்கிறேன். ராகவா, காகுத்ஸதா, ஹயஷிரஸ் என்ற அஸ்திரத்தையும், அப்படியே கிரெளஞ்ச அஸ்திரத்தையும், (விஷ்ணுசக்தி மற்றும் ருத்ரசக்தி எனும்) இரண்டு சக்திகளையும் உனக்கு கொடுக்கிறேன். ராட்சசர்களுடைய வதத்தின் பொருட்டு எவைகளோ (அவைகளான) இவைகளை எல்லாம் கொடுக்கிறேன். கங்காளம் என்ற அஸ்திரத்தையும், கோரமான முசலம், கங்கணம், காபாலம் (அஸ்திரங்களையும்), எவைகளை (அதாவது எந்தெந்த அஸ்திரங்களை) அசுரர்கள் தரிக்கிறார்களோ, இவைகளை இப்பொழுது பூரணமாக கொடுக்கிறேன்.

பெரும் கரம் படைத்தவனே, மானுடரில் சிறந்தவரின் மைந்தா, பெயரினால் நந்தனம் என்று பெயர்பெற்ற வித்யாதர மகாஸ்திரத்தையும், ரத்தினம் போன்ற வாளையும் கொடுக்கிறேன். ராகவா, பெயரினால் மானவமென்று பெயர்பெற்ற பிரியமான கந்தர்வ அஸ்திரத்தையும், ப்ரஸ்வாபனம் என்றும் ப்ரஷ்மனமென்னும் (அஸ்திரங்களையும்), செளர்யமென்கிற (அஸ்திரத்தையும்) கொடுக்கிறேன். தர்பணாஸ்திரத்தையும், சோஷணாஸ்திரத்தையும், சந்தாபனம் (மற்றும்) விலாபனம் (என்கிற அஸ்திரங்களையும்), கந்தர்பனுக்கு (அதாவது மன்மதனுக்கு) பிரியமான, வெல்லமுடியாததான மதனம் (என்கிற அஸ்திரத்தையும்), இன்னும் பெரும் புகழ்வாய்ந்தவனே, நரர்களுள் புலியைப்போன்றவனே, ராஜபுத்திரா, பெயரினால் மோஹனம் என்று பெயர்பெற்ற பைஷாச (அதாவது பிசாசிற்கு) பிரியமான அஸ்திரத்தையும் பெற்றுக்கொள். நரர்களுள் புலியே, மகாபலவானே, ராஜகுமாரா, தாமஸம் (அஸ்திரத்தையும்), செளமனம் (அஸ்திரத்தையும்), வெல்லமுடியாத சம்வர்தம் (அஸ்திரத்தையும்), மெளசலம் (அஸ்திரத்தையும்), சத்ய அஸ்திரத்தையும், அப்படியே பெரும் கரம் படைத்தவனே, உயர்ந்த மாயாதரம் (அஸ்திரத்தையும்), எதிரிகளின் தேஜஸை அபகரிக்கும் சூர்ய சம்மந்தமான, பெயர்பெற்ற தேஜப்ரபம் (அஸ்திரத்தையும்), ஷிஷிரம் என்று பெயர்பெற்ற சோமாஸ்திரத்தையும், மிகக் கொடிய த்வஷ்டாஸ்திரத்தையும், பகனுடைய கொடிய ஷீதேஷு என்கிற மானவாஸ்திரத்தையும், பெரும் கரம் கொண்டவனே, அரசகுமாரா, (ஸ்ரீ)ராமா, விரும்பிய உருவங்கொள்ளவல்ல, மகாபலமுள்ள, வெகு கம்பீரங்களான இவைகளை அனைத்தையும் உடனே பெற்றுக்கொள்.

அப்பொழுது முனிவரர் (அதாவது விஷ்வாமித்ரர்) கிழக்குமுகமாக இருப்பவராக ஆகி, பரிசுத்தராய், மிகவும் பிரீதியுள்ளவராயும், மிகவும் உத்தமமான மாத்திரசமூகத்தை (ஸ்ரீ)ராமருக்கு கொடுத்தார். எவைகளுடைய முழுமையாய் அடைதல் தெய்வங்களுக்கும் துர்லபமோ, அந்த அஸ்திரங்களை அப்பொழுது அந்தணர் ராகவருக்கு தெரிவித்தார். அறிஞரான, ஜபிக்கிற அந்த முனிவரான விஷ்வாமித்ரருடைய மிகச்சிறந்த அஸ்திரங்கள் எல்லாம் இப்பொழுது ராகவருக்கு முன்வந்து நின்றன. அப்பொழுது (அஸ்திரங்கள்) எல்லோரும் மகிழ்ச்சியுடையவர்களாய், கைகூப்பினவர்களாயும் (ஸ்ரீ)ராமரை பார்த்து சொன்னார்கள், ‘ராகவா, இந்த நாங்கள் உமக்கு வெகு கம்பீரங்களான கிங்கரர்கள் (அதாவது வெளியாட்கள்) அன்றோ.காகுத்ஸதர் (அதாவது ஸ்ரீராமர்) கையால் நன்றாக தொட்டும், கிரகித்துக்கொண்டும் என்னுடைய மனதை அடைந்தவர்களாக ஆகக்கடவீர்கள்என்று அவர்களுக்கு ஆணையிட்டார். அதன்மேல் சந்தோஷித்த மனமுடையவராய், மகாதேஜஸ்வியான (ஸ்ரீ)ராமர், மகாமுனியான விஷ்வாமித்ரரை அபிவாதனம் செய்து (அதாவது வணங்கி), புறப்பட சித்தமாக இருந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்தி ஏழாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment