(வால்மீகி)
தர்மாத்மா (அதாவது வால்மீகி) தர்மத்தோடு கூடின முழுமையான வஸ்துவை (அதாவது
காவியத்தின் சாராம்சத்தை) கேட்டு,
தீமானான அவருடைய யாதொரு
விருத்தமோ அதை மேன்மேலும் தெளிவாய் சிந்திக்கிறார். முனிவர் (அதாவது வால்மீகி) சரியானபடி நீரை அருந்தி (அதாவது
ஆசமனம் செய்து), கிழக்கு நுனிகளையுடைய தர்ப்பைகளில் இருந்து, கைகூப்பினவராய்
தர்மபலத்தினால் என்ன என்ன உள்ளதென்பதை சிந்திக்கிறார். (ஸ்ரீ)ராமர்,
லக்ஷ்மணர், சீதை
இவர்களாலே, மனைவிகளோடு கூடின, பிரஜைகளோடு கூடின, ராஜாவான
தசரதராலேயும் எது அடையப்பட்டதோ,
அவ்விஷயத்தில் சிரிப்பும், பேச்சும்
யாதொரு அசைவோ, யாதொரு செய்கையோ,
அது எல்லாவற்றையும்
தர்மவீர்யத்தால் எப்படி எப்படியோ,
அந்தந்தவிதமாய் நன்றாய்ப்
பார்க்கிறார். அப்பொழுது பெண்களை மூன்றாம் பேர்வழியாய் உடைய வனத்தில் சஞ்சரிக்கிற
சத்தியசந்தரான (ஸ்ரீ)ராமரால் எது
அடையப்பட்டதோ அந்த எல்லாவற்றையும் காண்கிறார்.
இன்னமும் தர்மாத்மா யோகநிலையை
அடைந்தவராய் அவர்களிடத்தில் முன்பு எது நடந்ததோ, அந்த எல்லாவற்றையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல கண்டார். மகா ஒளியுடைய அவர் (அதாவது வால்மீகி) அந்த எல்லாவற்றையும் நடந்தபடி
தர்மத்தால் பார்த்து, மனதை கவர்கின்றவரான (ஸ்ரீ)ராமருடைய காமம், அர்த்தம், குணம்
இவைகளோடு சேர்ந்த, அறம்,
பொருள், குணம் இவைகளை
விரிவாக, ரத்தினங்களால் நிறைந்த சமுத்திரத்தை போல அனைவரின்
செவிகளுக்கும் இனிதான சரித்திரத்தை செய்ய தயாரானார்.
பகவானான ரிஷி (அதாவது வால்மீகி) ரகுவம்சத்தினுடைய சரித்திரத்தை முன்பு
மகரிஷி நாரதரால் எப்படி சொல்லப்பட்டதோ அவ்வாறே (ஸ்ரீ)ராமருடைய நல் மகத்தான
பிறப்பையும், வீர்யத்தையும், அதோடு அனைவரிடத்திலும் அனுகூலமாக இருத்தலையும், உலகிற்கு பிரியமாயிருத்தலையும், பொறுமையையும், செளம்யமாயிருத்தலையும், சத்யசீலராயிருத்தலையும், விஷ்வாமித்திரரோடு சேர்ந்ததில் அபூர்வமான கதைகளையும், அவ்விதமாய் வில்லை முறித்தலையும், ஜானகியினுடைய (அதாவது சீதையினுடைய) விவாகத்தையும், (பரசு)ராமருக்கும் (ஸ்ரீ)ராமருக்கும்
நடந்த விவாதத்தையும், அப்படியே தாசரதியினுடைய (அதாவது ஸ்ரீராமருடைய) குணங்களையும், (ஸ்ரீ)ராமருடைய பட்டாபிஷேக (முயற்சியையும்), அவ்வண்ணமாய்
கைகேயியின் துஷ்ட இயல்பினையும்,
அபிஷேகத்தினுடைய
தடையையும், (ஸ்ரீ)ராமருடைய நாடு
கடத்தலையும், ராஜாவினுடைய (அதாவது தசரதருடைய) சோகத்தாலுண்டான புலம்பலையும், பரலோகம்
அடைதலையும், குடிமக்களின் துக்கத்தையும், குடிமக்களை
திருப்பி அனுப்புதலையும், வேடர் அதிபதியோடு நடந்த உரையாடலையும், அப்படியே
சாரதியினுடைய திருப்புதலையும்,
கங்கையை தாண்டுதலையும், (ரிஷி) பரத்வாஜரின் தரிசனத்தையும், பரத்வாஜருடைய
நியமனத்தால் சித்ரகூடத்தினுடைய (சித்ரகூடம்
இன்றைய மத்திய பிரதேச மாநிலத்திலுள்ளது. சித்ரகூட் என்று இன்று அழைக்கப்படுகிறது; அயோத்தியாவிலிருந்து
இந்த இடம் 275 கி.மீ. தொலைவிலுள்ளது) தரிசனத்தையும், வாஸ்து
கர்மத்தையும் (அதாவது குடில்
நிர்மாணித்தலையும்), பிரிவேசித்தலையும், (ஸ்ரீராமருடைய தம்பி) பரதருடைய வரவையும், அவ்வண்ணமே (ஸ்ரீ)ராமரை மகிழ்வூட்டுதலையும், தந்தைக்கு
நீரால் செய்யப்படும் சடங்கினை (அதாவது தர்ப்பணம்)
செய்தலையும், சிறந்த பாதுகையினுடைய பட்டாபிஷேகத்தையும், நந்திகிராமத்தில்
(நந்திக்கிராமம் இன்றைய உத்திர பிரதேச
மாநிலத்திலுள்ளது. பரத குண்டம் என்றும் அழைக்கப்படுகிறது; அயோத்தியாவிலிருந்து
இந்த இடம் 21.4 கி.மீ. தொலைவிலுள்ளது) வசித்தலையும், அனசூயாயோடு இருந்ததையும், அங்கத்தில்
பூசப்படும் கூழ்தனை அளித்தலையும்,
அவ்வாறே தண்டகாரண்யத்திற்கு செல்லுதலையும், அவ்விதமாய்
விராதனுடைய வதத்தையும், ஷரபங்கருடைய தரிசனத்தையும், சுதீக்ஷ்ணரோடு
சேர்ந்ததையும், அகத்தியருடைய தரிசனத்தையும், ஜடாயுவை
தரிசனத்தையும், சூர்பணகையின் உரையாடலையும், விரூபம்
செய்ததையும், அவ்வண்ணமாய் கரன், த்ரிசிரஸ் இவர்களுடைய
வதத்தையும், ராவணனுடைய முயற்சியையும், மாரீசனுடைய
வதத்தையும், வைதேஹியினுடைய (அதாவது சீதையினுடைய) கடத்தலையும், ராகவருடைய (அதாவது ஸ்ரீராமருடைய) கதறலையும், கழுகுராஜனுடைய
வதத்தையும், கபந்தனுடைய தரிசனத்தையும், ஷபரியினுடைய
தரிசனத்தையும், (மேலும்) பம்பையினுடைய
தரிசனத்தையும், அவ்வாறே பம்பையில்
மகாத்மாவான ராகவருடைய (அதாவது
ஸ்ரீராமருடைய) புலம்பலையும்,
ஹனுமாருடைய தரிசனத்தையும், ரிஷ்யமூக
பர்வதத்திற்கு செல்லுதலையும்,
சுக்ரீவரோடு சேருதலையும், நம்பிக்கை
உண்டாக்கும்படியான நட்பையும்,
வாலி-சுக்ரீவ
யுத்தத்தையும், வாலியினுடைய வதத்தையும், தாரையின்
புலம்பலையும், சுக்ரீவருக்கு அளித்தலையும், இசைவையும், மழைக்கால
தினங்களில் வசித்தலையும், ராகவ சிம்மத்தினுடைய கோபத்தையும், (படை) பலங்களினுடைய சேர்க்கையையும், கணையாழியை
கொடுத்தலையும், பூமியினுடைய அமைப்பைக் கூறுதலையும், திசைகளைக்குறித்து
போகுதலையும், பர்வதத்தில் ஏறினதையும், ரிக்ஷ
பர்வதத்தினுடைய சுரங்கத்தினுடைய தரிசனத்தையும், மரணிக்கும்
வரை உண்ணாவிரதம் இருந்ததையும்,
சம்பாதியினுடைய
தரிசனத்தையும், அவ்வாறே சமுத்திரத்தை
தாண்டுதலையும், சமுத்திரத்தின் வார்த்தையால் மைனாகபர்வதத்தினுடைய
தரிசனத்தையும், ராட்சசியின் மிரட்டலையும், நிழலை
பிடிப்பினுடைய அனுபவத்தையும்,
சிம்ஹிகையினுடைய
வதத்தையும், இலங்கையின் மலயமலையின் தரிசனத்தையும், இரவில்
இலங்கையினுள் பிரவேசித்தலையும்,
ஒருவராக இருக்கிறவருடைய
ஆலோசனையையும், புஷ்பகவிமானத்தின் தரிசனத்தையும், அந்தப்புரத்தின்
தரிசனத்தையும், மது அருந்தும் இடத்திற்கு சென்றதையும், அசோகவனத்திற்கு
போனதையும், ராட்சசிகளுடைய மிரட்டலையும், த்ரிஜடை கனவு
காணுதலையும், சீதையின் தரிசனத்தையும், விஷயங்களை
எடுத்துரைத்தலையும், ராவணனின் தரிசனத்தையம், ராவணனுடைய
மனோபாவத்தையும், கணையாழியை கொடுத்தலையும், சீதையினுடைய
உரையாடலையும், சீதையினுடைய சூடாமணி கொடுத்தலையும், மரங்களை
அழித்தலையும், ராட்சசிகளுடைய ஓடுதலையும், கிங்கரர்களுடைய
வதத்தையும், வாயுபுத்திரர் பிடிப்பட்டதையும், இலங்கையை
கொளுத்தி கர்ஜித்ததையும், பிறகு திரும்பித் தாண்டினதையும், தேனின்
அபகரித்தலையும், ராகவரை (அதாவது
ஸ்ரீராமரை) தேற்றுதலையும்,
அவ்வாறே (படை)பலங்களின் புறப்பாடையும், சமுத்திரத்தின் சங்கமமும், விபீஷணரோடு சேர்க்கையையும், நளனால் சேதுவினுடைய பந்தனத்தையும், சமுத்திரத்தை தாண்டுதலையும், இரவில் இலங்கையை முற்றுகை போடுதலையும், கும்பகர்ணனுடைய வதத்தையும், வதைப்பதற்கு உபாயங்களை எடுத்துரைத்தலையும், மேகநாதனுடைய வதத்தையும், ராவணனுடைய விநாசத்தையும், விபீஷணருடைய பட்டாபிஷேகத்தையும், எதிரியின் பட்டணத்தில் சீதையை அடைதலையும், புஷ்பகவிமானத்தில் ஏறினதையும், அயோத்தியை அடைதலையும், பரதரோடு சந்தித்தலையும், (ஸ்ரீ)ராமருடைய பட்டாபிஷேகத்தின்
உதயத்தையும், அனைத்து சைன்யங்களை
அனுப்பிவிடுதலையும், தனது ராஜ்யத்தை
மகிழ்வித்தலையும், இன்னும் வைதேஹியினுடைய (அதாவது சீதையினுடைய) விட்டகற்றலையும் இயற்றினார்.
பகவானான வால்மீகி ரிஷி (ஸ்ரீ)ராமருடைய (கதையில்) பூதலத்தில் வராதது, இன்னும் சம்பவிக்காதது எதுவோ அது முழுவதையும் உத்தர
காவியத்தில் செய்தார்.
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் மூன்றாம் ஸர்க்கம்
முற்றிற்று ||
No comments:
Post a Comment