“பிறகு குதிரை வந்தபோது அந்த வருடமும் நிரம்பினவளவில், சரயூநதியின்
வடக்கு கரையில் ராஜாவினுடைய யாகமும் நடந்தது. நல் மகாத்மாவான இந்த ராஜாவினுடைய அஷ்வமேதம் என்கிற மகா
யாகத்தில் த்விஜர்களுள் (த்விஜர்
என்றால் இருபிறப்பாளன் என்று பொருள்,
முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம்
பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) காளையரான ரிஷ்யஸ்ருங்கரை தலைமையாக
வைத்துக்கொண்டு காரியத்தை செய்தார்கள். வேதங்களில் கரைகண்டவர்களான யாஜகர்கள்
கர்மங்களை விதிப்படி செய்தார்கள். விதிப்படி, நியாயப்படி, சாஸ்திரப்படி
செய்யத்தொடங்கினர். த்விஜர்கள் (த்விஜர்
என்றால் இருபிறப்பாளன் என்று பொருள்,
முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம்
பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) ‘ப்ரவர்க்யம்’ (என்ற கர்மாவை) சாஸ்திரப்படி செய்து; ‘உபஸதம்’ (என்கிற இஷ்டியையும்) இன்னும் சாஸ்திரப்படி மேல்
செய்யவேண்டிய எல்லா கர்மத்தையும் விதிப்படி செய்தார்கள். முனிபுங்கவர்கள்
எல்லோரும் சந்தோஷமுடையவர்களாய் பூஜித்து, அதன்மேல் ‘ப்ராதஸ்ஸவனம்’ முதலிய
கர்மாக்களை விதிப்படி செய்தார்கள்.
“இந்திரனுக்குச் சேர வேண்டிய (ஹவிர்பாகமும்) (ஹவிர்பாகம் என்றால் யாகத்திலிடும்
பொருளாகும்) விதிப்படி கொடுக்கப்பட்டது. பாவமற்ற (சோம)ராஜாவும்
துதிக்கப்பட்டார். மதிய காலத்திற்குரிய சவனம் (எனும் யாகமும்) விதிப்படி
நடந்தது. அந்த பிராமணபுங்கவர்கள் இந்த நல்மகாத்மாவான ராஜாவினுடைய (அதாவது
தசரதருடைய) மூன்றாவது சவனத்தையும் சாஸ்திரப்படி பார்த்து, உள்ளபடி
செய்தார்கள். அச்சமயத்தில் யாகத்தில் இடாததும், தவறினதும்
கொஞ்சமும் இல்லை. எல்லாம் வேதம் போன்று காட்சியளித்தது. நலத்தோடு
கூடியிருக்கும்படி செய்தார்கள். அந்த தினங்களில் அங்கு சிரமடைந்தவனாவது, பசித்தவனாவது
காணப்படவில்லை. வித்துவான் அல்லாத பிராமணன் இல்லை. அதோடு கூட நூற்றுக்கணக்கான
சிஷ்யர்களுடன் கூடி இராதவனும் இல்லை. நித்தமும் பிராமணர்கள் புசித்தார்கள், வேலையாட்களும்
புசித்தார்கள், தபஸ்விகளும் புசித்தார்கள், இன்னும்
சந்நியாசிகளும் புசித்தார்கள்.
“வயது முதிர்தவர்களும், நோயாளிகளும், இன்னும்
பெண்களும், சிறுவர்களும் எப்பொழுதும் சாப்பிட்டிக்கொண்டிருந்தபோதிலும்
திருப்தி கொள்ளவில்லை. ‘அன்னம் கொடுக்கப்படட்டும், விதவிதமான
வஸ்திரங்கள் கொடுக்கப்படட்டும்’
என்று அங்கு அடிக்கடி
ஏவப்பட்டவர்கள் அப்படியே செய்தார்கள். தினம் தினம் விதிப்படி அப்பொழுது
தயாராயிருக்கிற அநேக அன்னத்தினுடைய சிகரங்கள், மலைகளுக்கு
சமானமாகவும் அங்கு காணப்படுகின்றன. மகாத்மாவினுடைய அந்த யாகத்தில் பல
தேசங்களிலிருந்து வந்த புருஷர்கள் அப்படியே பெண்டிர் கூட்டங்கள் அன்னம், பானம்
இவைகளால் நன்றாக திருப்தியடைவிக்கப்பட்டார்கள். ‘அன்னம்
விதிப்படி சுவையாய் இருக்கிறது. திருப்தியடைந்தோம். உமக்கு மங்கலம். என்ன
ஆச்சரியம்!’ என்று த்விஜ காளையர்கள் சிலாகித்தார்கள். ராகவர் (அதாவது தசரதர்) (அதனை) செவிமெடுத்தார்.
“நன்றாய் அலங்கரிக்கப்பட்ட புருஷர்களும் பிராமணர்களுக்கு
உணவளித்தார்கள். பிரகாசிக்கும் மணிகுண்டலங்களையுடைய மற்றவர்களும் அவர்களை
உபசரித்தார்கள். அப்பொழுது (யாக)காரியத்தின்
இடைவெளியில் தைரியமுடைய நல்ல வாக்கு சாமர்த்தியமுள்ள பிராமணர்கள் ஒருவரையொருவர்
மேலிட ஆவல்கொண்டதாலே அநேக விவாதங்களையும் மேற்கொண்டனர். நாள்தோறும் அங்கு
திறமையுள்ளவர்களான அந்த த்விஜர்கள் (த்விஜர்
என்றால் இருபிறப்பாளன் என்று பொருள்,
முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம்
பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) ஏவப்பட்டவர்களாய் யாகத்தில் எல்லாக்
கர்மங்களையும் சாஸ்திரப்படி செய்தனர். இதில் ஆறு வேத அங்கங்களை அறியாதார் இல்லை, விரதமில்லாதார்
இல்லை, பல்வேறு ஸ்ருதிகளை (வேதங்களை) அறியாதவர் இல்லை. வாதத்தில் திறமையற்றவரான
த்விஜர்கள் அந்த ராஜாவினுடைய உறுப்பினரவையில் இல்லை. அதில் யாகஸ்தம்பம் நடும் வேளை
வந்தபொழுது ஆறு வில்வமரத்தால் செய்த,
அப்படியே கருங்காலியால்
செய்து வில்வத்தோடு கூடின அத்தனையும்,
மேலும் பலாச மரத்தால்
செய்த அத்தனையும், (சாஸ்திரத்தின்)
வழிகாட்டுதலின் படி நறுவிலி மரத்தாற் செய்த அப்படியே தேவதாரு மரத்தாற் செய்த
இரண்டும், பிரிக்கப்பட்ட கைகளினால் தொடக்கூடியவைகளாக அங்கு
நாட்டப்பட்டன.
“இந்த அனைத்தும் சாஸ்திரமறிந்த யாகப் பிரயோகமறிந்தவர்களாலேயே
செய்யப்பட்டன. அந்த யாகத்தினுடைய ஒளியின் நிமித்தம் பொன்னினால்
அலங்கரிக்கப்பட்டவைகளாக இருந்தன. அந்த இருபத்தியொரு பந்தக்கால்களும் இருபத்தியொரு
முழ (நீளம்). இருபத்தியொரு
வஸ்திரங்களால் ஒவ்வொன்றாக நன்கு அலங்கரிக்கப்பட்டன. எல்லாம் சிற்பிகளால் நன்கு இயற்றப்பட்டவைகள், திடமானவைகள், விதிப்படி
ஸ்தாபிக்கப்பட்டவைகள். எல்லாம் எட்டு மூலைகள் உள்ளவைகள். லட்சணமான ரூபங்களோடு
கொண்டவைகள். அவைகள் வஸ்திரங்களால் மறைக்கப்பட்டன; பூக்களாலும், வாசனைப்
பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டன;
தேவலோகத்தில் சப்த
ரிஷிகளைப் போல் ஒளியுடன் விளங்கின.
“ரிஷ்யஸ்ருங்கர் முதலியவர்கள் சிக்ஷை (எனும் வேத அங்கத்தில் சொல்லியிருக்கும்) அக்ஷரங்களோடு
கூடிய மந்திரங்களினால் ஷக்ரனையும் (அதாவது இந்திரனையும்), (பிற) உத்தம தேவர்களையும் அங்கு அழைத்தார்கள். ஹோதாக்கள்
மதுரமான, அழகான இசைநடைகொண்டு அழைக்கும் மந்திரங்களாலே தக்கவாறு
உபசாரஞ்சொல்லி தேவர்களுக்கு ஹவிர்பாகங்களை (அதாவது யாகத்திலிடும் பொருட்களை) கொடுத்தார்கள். அங்கு
யாககர்மத்தில் சமர்த்தர்களான பிராமணர்களால் நியாயப்படி, பிராமணத்தின்
படி செங்கற்களும் செய்விக்கப்பட்டன. அக்னிக்கு இருப்பிட வேதியும்
ஏற்படுத்தப்பட்டது. ராஜசிம்மத்தினுடைய
அந்த யாகவேதி சமர்த்தர்களான த்விஜர்களால் கருடரூபம் கொண்ட (யாக குண்டம்) பொற்சிறகையுடையதாக, (பிற யாக குண்டங்களை விட) மூன்றுமடங்காக, பதினெட்டு
பிரிவாக நன்றாகச் செய்யப்பட்டது. சாஸ்திரப்படி விதிக்கப்பட்ட பசுக்களும், பாம்புகளும், பறவைகளும்
அந்தந்த தேவர்களை உத்தேசித்து அங்கு கட்டப்பட்டன.
“யாகத்தில் (பலியிடப்படவிருக்கும்
விலங்குகளான) குதிரையும்,
அப்படியே எந்த நீர்வாழ்
உயிரினங்களோ இது எல்லாம் ரிஷிகளால் அப்படியே சாஸ்திரப்படியே அங்கு கட்டப்பட்டது.
அங்கு யாகஸ்தம்பங்களில் முன்னூறு பசுக்களும், ராஜா தசரதரின் குதிரை
ரத்தினங்களில் உத்தமமானதும் அப்பொழுது அங்கு கட்டப்பட்டது. கெளசல்யா அங்கு அந்த
இக்குதிரையை பக்தியுடன் கூடினவளாய்,
மூன்று வாட்களால் அதிகமான
சந்தோஷத்தோடு கொன்றாள். அப்பொழுது
கெளசல்யாவும் தர்மத்தினுடைய கோரிக்கையாலே திடமான எண்ணத்துடன் குதிரையோடு கூட ஓர்
இரவு தங்கினாள். ஹோதா அத்வர்யு இன்னும் உத்காதா மஹிஷியோடு (அதாவது பட்டத்து ராணியோடு), பரிவ்ருத்தியோடு
(இளைய மனைவியோடு) கூட மற்றொரு
வாவாதையையும் (அதாவது அரசருக்கு பிடித்தமான மனைவியையும்) குதிரையோடு
சேர்த்து பெற்றுக்கொண்டார்கள்.
“அந்த குதிரையினுடைய கொழுப்பை எடுத்து, புலன்களை
அடக்கிய ஞானசெல்வமுள்ள அத்வர்யு சாஸ்திரப்பிரகாரம் பாகம் செய்தார். நராதிபதிகள்
காலப்படி, நியாயப்படி தன்னுடைய பாவத்தை விரட்டிட கொழுப்பினுடைய
புகையின் வாசனையையும் முகர்ந்தார்கள். குதிரையினுடைய எந்த அங்கங்களோ, அந்த
எல்லாவற்றையும் பதினாறு ரித்விஜர்களான பிராமணர்கள் எல்லோரும் அக்னியில் விதிப்படி
ஹோமம் செய்தார்கள். இதர யாகங்களுடைய ஹவிஸ் (அதாவது யாகத்திலிருக்கும் பொருட்கள்)
இத்திமரக்கிளைகளில் செய்யப்படுகிறது. அஷ்வமேதம் என்ற ஒன்றுக்கோ, (ஹவிர்)பாகம் வஞ்சிமர சம்பந்தமாக விதிக்கப்பட்டுள்ளது.
கல்ப சூத்திரத்தால், பிராமண (வாக்கியங்களால்)
அஷ்வமேதம் மூன்று நாட்களையுடையதாக எண்ணப்படுகிறது. அதனுடைய முதல் தினம் ‘அக்னிஷ்டோமம்’ ஏற்படுத்தப்பட்டது.
‘உக்த்யம்’
இரண்டாவதாக
எண்ணப்படுகிறது. அப்படியே, ‘அதிராத்ரம்’
அடுத்தாக (அமைகிறது).
“அங்கு சாஸ்திரங்களில் காண்கையாலே விதிக்கப்பட்ட அநேகங்கள்
நிறைவேற்றப்பட்டன. அதிராத்ரமிரண்டும் நடத்தப்பட்டது. ஜ்யோதிஷ்டோமமும், ஆயுஷ்டோமமும்
இப்படியே ‘அபிஜித்’
(என்ற யாகம்), ‘விஷ்வஜித்’
(என்ற யாகம்), மகாயாகமான ‘ஆப்தோர்யாமம்’
(என்ற யாகமும்), இப்படியே தன் குலத்தை விருத்தி செய்பவர் (அதாவது தசரதர்) திசைகளை வாஜிமேதனத்தாலே (அதாவது
அஷ்வமேதத்தாலே) யஜித்தார். தன் குலத்தை
விருத்தி செய்கிறவரான ராஜா (தசரதர்)
ஹோதாவிற்கு கிழக்கு திசையையும்,
அத்வர்யுவிற்கு மேற்கு
திசையையும், பிரம்மாவிற்கு தெற்கு திசையையும், இன்னும்
உத்காதாவிற்கு வடக்கு திசையையும் கொடுத்தார். ஆதிகாலத்தில் சுயம்புவால் (அதாவது பிரம்மாவால்) உண்டாக்கப்பட்ட அஷ்வமேதமென்கிற மகா
யாகத்தில் இந்த தட்சிணை செய்யப்பட்டது. புருஷர்களுள் காளையரான, குலத்தை
விருத்தி செய்கிறவரான ராஜா அப்பொழுது நியாயப்படி யாகத்தை முடித்து, உடனே அந்த
பூமியை ரித்விஜர்களுக்கு கொடுத்தார்.
“ரித்விஜர்கள் அனைவரும், ‘பூமிபாலரே (அதாவது தசரதரே),
தாம் ஒருவரே முழுமையான
பூமியை ரட்சிக்க உரியவராகிறீர். எங்களுக்கு பூமியால் காரியம் இல்லை. தரணியால்
பிரயோஜனம் இல்லை. (நாங்கள்) பரிபாலிப்பதில்
சக்தர்கள் இல்லை அன்றோ! நாங்கள் எப்பொழுதும் அத்யயனம் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள்
அன்றோ! நரர்களுள் சிறந்தவரே,
தாம் எங்களுக்கு
இதற்கீடான விலையை கொடும். மணிரத்தினமோ,
பொன்னோ, பசுக்களோ எது
இருக்கிறதோ அதில் கொஞ்சம் மாத்திரம் கொடும்,’ (என்று) களங்கம் விலகிய ராஜாவைப்பார்த்து சொன்னார்கள். நரபதியான அரசர் (அதாவது தசரதர்) வேதங்களில் கரைகண்ட பிராமணர்களால் இவ்வாறு
சொல்லப்பட்டவராய் அவர்களுக்கு பத்து நூறாயிரம் (அதாவது லட்சம்)
பசுக்களையும், பத்து கோடி பொன்னினையும், (அதனைக்காட்டிலும்) நான்கு மடங்கு வெள்ளியையும்
கொடுத்தார்.
“அப்பால்,
அனைத்து ரித்விஜர்களும்
ஒன்றுசேர்ந்து முனிவரான ரிஷ்யஸ்ருங்கருக்கும், அறிஞரான
வசிஷ்டருக்கும் வசுவை (அதாவது
செல்வத்தை) கொடுத்தார்கள். அப்பொழுது அந்த உத்தம த்விஜர்கள் (த்விஜர்
என்றால் இருபிறப்பாளன் என்று பொருள்,
முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம்
பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) நியாயப்படி பாகம் செய்தனர்.
எல்லோரும் மிகவும் மகிழ்ந்த மனமுடையவர்களாய், மிகவும்
சந்தோஷமடைந்தவர்களாய் திரும்பிச் சென்றனர். அதற்கு மேல், உறுதியானவராய்
(யாக) நிமித்தம் வந்திருந்த
பிராமணர்களுக்கு அப்பொழுது கோடிக்கணக்கான ஜம்புநதியில் (இன்றைய பங்களாதேஷில்
உள்ள தாமோதர்பூரில் இருக்கும் தினஜ்பூர் மாவட்டத்திலுள்ள நதியாக இருக்கலாம்)
உண்டான தங்கத்தையும் கொடுத்தார். ரகுநந்தனர் (அதாவது தசரதர்) இந்நிலையில் யாசிக்கிற, தரித்திரரான
ஒவ்வொரு த்விஜருக்கும் உத்தம கையில் பூட்டிடும் காப்பினை கொடுத்தார். அப்பொழுது
வித்துவான்களான த்விஜர்கள் மகிழ்வுற்றிருந்தவளவில், த்விஜர்களிடத்தில்
அன்புகொண்டவர் (அதாவது தசரதர்)
சந்தோஷத்தில் நனைந்த கண்களையுடையவராக அவர்களுக்கு வந்தனத்தை செய்தார்.
“அவ்விதம் தரணியில் நமஸ்காரம் பண்ணிக்கொண்டிருக்கிறவரும், நரர்களில்
வீரரும், தாராளமானவருமான அவருக்கு பிராமணர்களால் விதவிதமான
ஆசீர்வாதங்கள் நன்றாகக் கூறப்பட்டன. பாவத்தைப் போக்குவதான, ஸ்வர்கத்தை
பெறுவிப்பதான ராஜகாளையரால் சுலபமாகச் செய்து முடிக்கக்கூடாத உத்தமமான யாகத்தை
செய்துமுடித்து, அதனால் ராஜா மகிழ்வுற்றவராக ஆனார். அப்பொழுது ராஜா தசரதர்
அப்பால் ரிஷ்யஸ்ருங்கரைப்பார்த்து சொன்னார், ‘நல் விரதமுடையவரே, குலத்தின்
நீட்சிக்கான கயிற்றை (அதாவது
சந்ததியை) உண்டுபண்ண கடவீர்.’
அந்த த்விஜர்களில்
சிறந்தவரும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ராஜாவைப் பார்த்து
சொன்னார். ‘ராஜா,
உமது குலத்தை நிலைநிற்கச்
செய்கிற நான்கு புத்திரர்கள் உண்டாவார்கள்.’ அந்த நரேந்திரர் (அதாவது தசரதர்) அவருடைய மதுரமான வாக்கியத்தை கேட்டு
அவருக்கு சிரத்தையுடையவராய் வணங்கி,
மிக்க சந்தோஷத்தை
அடைந்தார். மகாத்மாவான ரிஷ்யஸ்ருங்கரும் அவரைப் பார்த்து மறுபடியும் சொன்னார்.”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பதிநான்காவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment