“அப்பால் அநேக திதிகள் அடங்கிய ஒரு நல் மனோகரமான வசந்த காலம்
ஆரம்பித்தவளவில் ராஜாவிற்கு யாகம் செய்ய எண்ணம் உண்டாயிற்று. அப்பொழுது தேவர்களைப்போன்ற நிறமுடைய அந்த அந்தணரை தலைவணங்கி, குலத்தினுடைய
சந்ததியின் பொருட்டு யாகத்திற்காக வரித்தார். நன்றாய் மரியாதை செய்யப்பட்டவரான
அவரும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ராஜாவைப் பார்த்து
சொன்னார். ‘(யாகத்திற்கான)
பொருட்கள் சேகரிக்கப்படட்டும். உம்முடைய துரகமும் (அதாவது குதிரையும்)
விடப்படட்டும்.’ அப்பொழுது ராஜா மிகச் சிறந்த மந்திரியான
சுமந்த்ரரைப்பார்த்து (கீழ்க்கண்ட)
வாக்கியத்தை சொன்னார், ‘சுமந்த்ரரே,
ரித்விஜர்களான, பிரம்மவாதிகளான
சுயக்ஞரையும், வாமதேவரையும்,
ஜாபாலியையும், காஷ்யபரையும், புரோகிதரான
வசிஷ்டரையும் இன்னும் பிற உத்தம த்விஜர்கள் (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல்
பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில்
கிடைப்பது) எவர்களோ அவர்களையும் விரைவாய் அழைத்துவாரும்.’
“அதன்மேல் துரித நகர்வையுடைய அந்த சுமந்த்ரர் துரிதமாய்
சென்று, வேதங்களில் கரையைக்கண்டவர்களான அந்த அந்தணர்கள் அனைவரும்
அழைத்துவந்தார். தர்மாத்மாவான தசரத ராஜா, அப்பொழுது அவர்களை
பூஜைசெய்து தர்ம அர்த்தங்களோடு சேர்ந்த சரியான லட்சணமான வார்த்தையை சொன்னார். ‘புத்திர
நிமித்தம் பரிதவிக்கிற எனக்கு சுகம் இல்லை. அதற்காக ஹயமேதத்தால் (அதாவது அஷ்வமேதத்தால்) யாகம் செய்ய வேண்டும் என்பது என்
எண்ணம். ஆகையாலே, நான் சாஸ்திரங்களில் கண்ட கர்மத்தின்படி யாகம் புரிய இச்சை
கொள்கிறேன். மேலும், நான் ரிஷிபுத்திரருடைய (அதாவது ரிஷ்யஸ்ருங்கருடைய) மகிமையாலே விருப்பத்தினை
பிராப்தம் பெறுவேன்.’ அவ்விடத்தில் வசிஷ்டரை முன்னிட்ட பிராமணர்கள் எல்லோரும்
அரசருடைய முகத்திலிருந்து உதித்த அவ்வாக்கியத்தை ‘நல்லது’ என்று
கொண்டாடினர்.
“அப்பொழுது ரிஷ்யஸ்ருங்கரை முன்னிட்டவர்களும்
வேந்தரைப்பார்த்து பதில் சொல்லினர்,
‘அந்த (யாகப்) பொருட்கள் சேகரிக்கப்படட்டும்; துரகமும்
விடப்படட்டும். எந்த உமக்கு புத்திரநிமித்தம் தர்மசம்பந்தமான இந்த எண்ணம் வந்ததோ (அதனால்) நான்கு அளவற்ற பராக்கிரமமுடைய புத்திரர்களை
அனைத்து வகையிலும் அடையப்போகிறீர்.’
அப்பொழுது ராஜா
த்விஜர்களால் (த்விஜர் என்றால்
இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம்
பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) சொல்லப்பட்ட இதனைக்கேட்டு
சந்துஷ்டராக ஆனார். மேலும்,
ராஜா சந்தோஷத்தோடு
மந்திரியரைப்பார்த்து சுபமான அட்சரங்களையுடைய இதனைச் சொன்னார். ‘குருமார்களுடைய
வார்த்தைப்படி எனக்கு (யாகப்)
பொருட்கள் சீக்கிரமாய் சம்பாதிக்கப்படட்டும். சமர்த்தர்களால் பாதுகாக்கப்பட்ட
உபாத்யாயர்களோடு கூடின குதிரையும் விடப்படட்டும். மேலும், சரயு நதியின்
வடக்கு கரையில் யாகபூமி விதிக்கப்படட்டும். சாந்தி கர்மங்களும் சடங்கின்படியும், சாஸ்திரப்படி
நடக்கட்டும். இந்த முக்கிய யாகத்தில்
கடுமையான அபராதம் உண்டாகும்;
இல்லையாகில் அனைத்து
மாதரசர்களாலும் இந்த யாகம் செய்தல் சாத்தியமாகும். வித்துவான்களான
பிரம்மராட்சசர்கள் இவ்விஷயத்தில் குறைகளை தேடுகிறார்கள்; இக்காரணத்தால்
இடையூறு செய்யப்பட்ட யாகத்தினுடைய கர்த்தா உடனே நாசமடைகிறான். ஆகையாலே, என்னுடைய
இந்த யாகம் விதிப்படி எவ்வண்ணம் பூர்த்தியாகுமோ அவ்வண்ணம், காரியங்களில்
சமர்த்தர்களே! (உங்களால்) இப்பொழுது
ஏற்பாடு செய்யப்படட்டும்.’
“அப்பொழுது மந்திரிகள் அனைவரும் ராஜேந்திரனுடைய (அதாவது தசரதருடைய) அந்த வாக்கியத்தை ‘அவ்வண்ணமே
செய்கிறோம்’ என்று கொண்டாடினர். ஆணைப்படி செய்தார்கள். அப்பால் அந்த
த்விஜர்கள் தர்மமறிந்த அரசகாளையை ஸ்தோத்திரம் செய்தார்கள். எல்லோரும்
விடைபெற்றவர்களாய் வந்தவாறு மறுபடி அங்கிருந்து சென்றார்கள். அந்த அந்தணர்கள்
போனவளவில் நராதிபதி (அதாவது தசரதர்) அந்த
மந்திரிகளை அப்படியே அனுப்பிவிட்டு,
மகா ஒளிபொருந்தியவராய்
தம் இருப்பிடத்தை அடைந்தார்.”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பன்னிரண்டாவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment