Monday, December 16, 2019

பதினோராவது ஸர்க்கம் – தசரதர் ரிஷ்யஸ்ருங்கரை அழைத்துவந்தது



ராஜேந்திரா (அதாவது தசரதரே), அந்த தேவருள் சிறந்தவர் (அதாவது ஸநத்குமாரர்) இன்னும் கதையில் பின்வருமாறு எப்படி சொன்னாரோ; இதமான (அந்த) வார்த்தையை முழுவதும் என்னிடத்திலிருந்து கேளும், இக்ஷ்வாகுகளுடைய குலத்தில் நல்ல தார்மிகரும், ஸ்ரீமானும், சத்தியத்திற்கு உண்மையாய் இருப்பவரும் பெயரினால் தசரதரென்பவருமான ராஜா பிறப்பார். அந்த ராஜாவிற்கு அங்கராஜரோடு நட்பு உண்டாகும்.  அங்கதேசத்தின் ராஜாவிற்கு ரோமபாதர் என்று பிரசித்திபெற்ற புத்திரர். மேலும், இவருக்கு (அதாவது ரோமபாதருக்கு) மகா பாக்கியமுடைய சாந்தை எனும் பெயர் கொண்ட கன்னிகை உண்டாகப்போகிறாள். மகத்தான புகழ் பெற்றவரான அந்த ராஜா தசரதர், ‘தர்மாத்மாவே (அதாவது ரோமபாதரே), சந்ததியற்றவனாக இருக்கிறேன். சாந்தையின் கணவர் (அதாவது ரிஷ்யஸ்ருங்கர்) (என்) குலத்தின் சந்ததியை பொருட்டு ஆணையிடப்பட்டவராகவே என் யாகத்தை அனுசரிக்கட்டும்.(என்று) அவரை அடையப்போகிறார்.

ராஜாவினுடைய அந்த வார்த்தையை கேட்டு தைரியம் கொண்ட அவர் (அதாவது ரோமபாதர்) இந்நிலையில் மனதில் சற்று ஆலோசித்து, புத்திரனை அளிக்க சமர்த்தரான சாந்தையின் கணவரை கொடுக்கப்போகிறார். அந்த ராஜா (அதாவது தசரதர்) அந்த அந்தணரை பெற்றுக்கொண்டு, அதனால் கவலை தீர்ந்தவராய், மிக்கக் களிப்புற்ற மனதோடு, அந்த யாகத்தை நடத்தப்போகிறார். மேலும், தர்மமறிந்த நரேஷ்வரரான ராஜா தசரதர் யாகத்தின் பொருட்டும், சந்தானத்தின் பொருட்டும், ஸ்வர்கத்தின் பொருட்டும், புகழில் விருப்பமுடையவராய் கைகூப்பினவராய் த்விஜர்களில் (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) சிறந்தவரான அந்த ரிஷ்யஸ்ருங்கரை வரிக்கப்போகிறார். அந்த மனவிருப்பத்தை, அந்த ஜனங்களின் பதி (அதாவது தசரதர்) த்விஜர்களில் முக்கியமானவரிடமிருந்து அடைவார்.  இவருக்கு (அதாவது தசரதருக்கு) அளவற்ற பராக்கிரமமுடையவர்களும், வம்சத்தை நிலைநிறுத்தக்கூடியவர்களும், அனைத்து உலகங்களிலும் பிரசித்திபெற்றவர்களுமான நான்கு புத்திரர்கள் உண்டாகப்போகிறார்கள்.

முற்காலத்தில் கிருதயுகத்தில் முன்தோன்றியவரும், பகவானும், பிரபுவும், தேவர்களில் சிறந்தவருமான அந்த ஸநத்குமாரர் இவ்வாறு கதையை சொன்னார். ஆண்களுள் புலியே, மகாராஜா (அதாவது தசரதரே), தாம் அந்த (படை)பலத்தோடும், வாகனங்களோடும் கூடினவராக சுயமாய் சென்று அவரை நன்றாக பூஜிக்கப்பட்டவராக அழைத்துவாரும்.

சாரதியின் வாக்கியத்தை கேட்டு, உடனே வசிஷ்டரையும் சம்மதிக்கச்செய்து, மந்திரிகளோடு கூடினவராயும் அந்தப்புரத்தோடு கூடினவராயும் (அவர்) அந்த த்விஜர் (அதாவது ரிஷ்யஸ்ருங்கர்) எங்கோ அங்கு சென்றார். வனங்களையும், நதிகளையும் மெதுவாய் கடந்து முனிபுங்கவர் எங்கோ அந்த தேசத்தை அடைந்தார். அடைந்து, ரோமபாதருடைய சமீபத்தையடைந்த, அனலனை (அதாவது அக்னியை) போல் விளங்குகிற ரிஷிபுத்திரரான அந்த த்விஜர்களுள் சிறந்தவரை முதலில் தரிசித்தார்.

அப்பொழுது அரசர் அந்த ராஜாவினுடைய தோழராகையால் ஆனந்தமடைந்து, உள்ளாத்மாவோடு விசேஷமாய் பூஜையை நியாயப்படி செய்தார். ரோமபாதரால் அறிஞரான ரிஷிபுத்திரருக்கு நட்பும், சம்பந்தமும் சொல்லப்பட்டது. அப்பொழுது உடனே அவரை கொண்டாடினார். மானுடக்காளையான ராஜா இவ்வாறு நன்றாய் பூஜிக்கப்பட்டராக ஏழு, எட்டு தினங்களை அவரோடு கூட வாசம் செய்து, ராஜாவைப்பார்த்து இவ்வாறு சொன்னார், ‘ஜனங்களுக்கு பதியான ராஜா (அதாவது ரோமபாதரே), உம்முடைய மகளான சாந்தை (தனது) கணவரோடு கூட, என்னுடைய நகரத்தை அடையட்டும்; மகத்தான காரியமானது ஆரம்பிக்கப்பட்டது.ராஜா (அதாவது ரோமபாதர்) அறிஞரான அவரின் புறப்பாட்டைப்பற்றி, ‘அப்படியே ஆகட்டும்என்று வாக்குகொடுத்து (ரோமபாதரிடம்), ‘மனைவியோடு கூட தாங்கள் செல்லுங்கள்(என்ற) வார்த்தையை அந்தணரைப்பார்த்து சொன்னார்.

அப்பொழுது ரிஷிபுத்திரர் செவிமெடுத்து அரசாரைப்பார்த்து, ‘அவ்வாறே ஆகட்டும்என்று சொன்னார். ராஜாவால் விடைபெற்றவராய் அவர் மனைவியோடு கூட சென்றார். தசரதர், வீர்யவானான ரோமபாதர் அவ்விருவர்களும் ஒருவருக்கொருவர் கைகூப்புதலை செய்து, ஸ்நேகத்தால் மார்போடு கட்டிக்கொண்டு களிப்புற்றார்கள். ரகுநந்தனர் (அதாவது தசரதர்) நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டவராய், பட்டணத்து ஜனங்களிடத்திற்கு வேகமாகச்செல்லுகிற தூதர்களை அவ்விடத்திலிருந்து அனுப்பினார். (தூதர்கள் அயோத்திக்கு சென்று கூறினர்,)நகரம் எங்கும் வேகமாக, நன்கு அலங்கரிக்கப்பட்டதாக, (வாசனை) தூபங்கள் இட்டதாக, நீர் தெளித்து பரிசுத்தமாக பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதாக செய்யப்படட்டும்.அவ்விடத்திற்கு ராஜாவின் வரவைக்கேட்டு, அந்த பட்டணத்து ஜனங்கள் வெகு சந்தோஷமடைந்தவர்களாய், ராஜாவால் எது சுட்டிக்காட்டப்பட்டதோ அதை எல்லாம் அப்படியே அப்பொழுது செய்தனர்.

அப்பொழுது ராஜா நன்றாய் அலங்கரிக்கப்பட்ட நகரத்தை சங்கு, துந்துபி வாத்திய கோஷங்களோடு உத்தம த்விஜரை (அதாவது ரிஷ்யஸ்ருங்கரை) முன்னிட்டுக்கொண்டு பிரவேசித்தார். அப்பொழுது இந்திரனுடைய பராக்கிரமம்போன்ற பராக்கிரமமுடைய நரேந்திரனால் (அதாவது தசரதரால்) மரியாதை பண்ணி பிரவேசிப்பித்த அந்த த்விஜரை பார்த்து நகரத்து ஜனங்கள் எல்லோரும் சந்தோஷமடைந்தார்கள். இவரை அந்தப்புரத்தை பிரவேசிப்பித்து, விதிப்படி பூஜை செய்து, அவருடைய வரவால் அப்பொழுது தன்னை எடுத்தகாரியத்தை முடித்தவராக எண்ணினார். அந்தப்புர பெண்கள் அனைவரும் அவ்வாறு கணவனோடு கூட வந்தவளான விசாலமான கண்களையுடைய சாந்தையை பார்த்து, மகிழ்வுடன் ஆனந்தத்தை அடைந்தார்கள். அவளும் அவர்களாலேயும், ராஜாவினாலேயும் விசேஷமாக கொண்டாடப்பட்டவளாக சுகமாய் செய்யப்பட்டவளாக கணவனுடன் கூடினவளாக அங்கு கொஞ்சம் காலம் வாசம் செய்தாள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பதினோராவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment