(பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் - ஸநத்குமாரர்கள்)
“இதைக்கேட்ட சாரதி ராஜாவைப்பார்த்து தனிமையில் இதனைச்
சொன்னார், ‘ரித்விஜர்களால் உபதேசிக்கப்பட்ட இந்த பூர்வக்கதை என்னால் கேட்கப்பட்டது.
கிழவனாகிற என்னால் கேட்கப்பட்டதான முற்காலத்தில் நடந்த விஷயம் எதுவோ அது
கேட்கப்படட்டும். ராஜா (அதாவது தசரதரே), பகவானான
ஸநத்குமாரர் ரிஷிகளின் சந்நிதியில் உமக்கு புத்திரர் உண்டாவதைக்குறித்து ஓர் கதையை
முன்பு சொன்னார்.
“காஷ்யபருக்கு விபண்டருக்கு என்று பிரசித்தமான புத்திரர்
இருக்கிறார். அவருக்கு ரிஷ்யஸ்ருங்கர் என்று நன்கறியப்பட்ட புத்திரரும்
உண்டாகப்போகிறார். பிராமணேந்திரரான (அதாவது பிராமணர்களில் இந்திரரான) அந்த முனிவர் (அதாவது
ரிஷ்யஸ்ருங்கர்) அதாவது வனத்தில்
எப்பொழுதும் வளமடைந்தவராய்,
வனவாசியாய் எப்பொழுதும்
தந்தையையே அனுசரித்திருப்பவராகையால் அப்பொழுது பிறவற்றை அறிகிறார் இல்லை. ராஜா (அதாவது தசரதரே),
உலகங்களில் பிராமணர்களால்
எப்பொழுதும் பிரசித்தமாக சொல்லப்பட்ட பிரம்மசர்யத்தினுடைய மாறுபாடும் (அம்)மகாத்மாவிற்கு (அதாவது ரிஷ்யஸ்ருங்கருக்கு)
உண்டாகப்போகிறது. இவ்விதம் இருக்கிறவரும், அக்னியாய் புகழுடைய
தந்தைக்கு முழுமையாய் பணிவிடை செய்கிறவருமான அவருடைய காலம் நன்றாக
கழிந்துகொண்டிருந்தது. இந்த காலத்திலேயே சக்தியுள்ள, மகாபலமுடைய
ரோமபாதர், அங்கதேசத்தின் (இன்றைய பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தின் பகுதிகளைக்கொண்டது அன்றைய அங்க
தேசம்) பிரசித்திப்பெற்ற ராஜாவாக இருக்கப்போகிறார்.
“அந்த ராஜாவினுடைய அதர்மத்தாலே மிகக்கடுமையானதும், வெகு
கோரமானதும் அனைத்து உயிர்களுக்கும் பயத்தையுண்டு பண்ணுகிறதுமான மழையின்மை
உண்டாகப்போகிறது. மழையின்மை உண்டானவளவில் ராஜா (ரோமபாதர்) துக்கமடைந்தவராய் ஞானியர்களான பிராமணர்களை
உடனே அழைத்து வர சொல்லப்போகிறார்,
‘தர்மத்தை அறிந்தவர்களும், உலகின்
நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்தறிந்தவர்களுமான நீங்கள் பிராயச்சித்தம் எப்படி
உண்டாகுமோ அப்படி உபாயத்தை அறிவுறுத்துங்கள்.’ வேதங்களின் கரைகண்டவர்களான அந்த பிராமணர்கள்
வேந்தரைப்பார்த்து, ‘ராஜா,
சகல உபாயங்களினாலே
விபண்டகருடைய புத்திரரை (அதாவது
ரிஷ்யஸ்ருங்கரை) இங்கு அழைத்துவாரும்,’ என்று
சொல்லப்போகிறார்கள். ‘வேந்தே (அதாவது
ரோமபாதரே), ரிஷ்யஸ்ருங்கரை பெரும் விருந்தோம்பல் பெற்றவராய்
அழைப்பித்து, கன்னிகையான (அரசரின் புதல்வியான) சாந்தையை விதிப்படி நன்றாய் அலங்கரித்துக் கொடும்.’
“அவர்களுடைய வார்த்தையை கேட்டு வீர்யவானான அந்த ராஜா
இப்பொழுது எந்த உபாயத்தால் இங்கு அழைப்பித்தல் சாத்தியமாகும் என்ற சிந்தனையை
அடையப்போகிறார். தைரியவானான ராஜா (உபாயத்தை)
நிச்சயித்து மந்திரிகளோடு கூட புரோகிதரையும், மந்திரிகளையும்
கெளரவித்து அங்கிருந்து அனுப்பப்போகிறார். அவர்களும் ராஜாவினுடைய வார்த்தையை
கேட்டு, ரிஷிக்கு பயந்தவர்களாய், துக்கமுடையவர்களாய், வணங்கின
முகமுடையவர்களாய் 'செல்லமாட்டோம்'
அந்த ராஜாவைப்பார்த்து
சமரசத்திற்காக சொல்லப்போகிறார்கள். ஆனாலும் தோஷம் உண்டாகாதபடிக்கே அதற்குத் தகுந்த
உபாயங்களை ஆலோசித்து, ‘நாங்கள் பிராமணரை அழைப்பிக்கின்றோம்’ (என்று) அவர்கள் அவருக்கு சொல்லப்போகிறார்கள். இவ்விதம்
ரிஷி குமாரர் (அதாவது ரிஷ்யஸ்ருங்கர்) அங்காதிபதியாலே (அதாவது அங்க
தேசத்து அரசராலே) விலைமாதர்கள் அழைப்பிக்கப்படுவர். உடனே (வருண)தேவர்
பொழியப்போகிறார். சாந்தையும் இவருக்கு விவாகம் செய்துகொடுக்கப்படுவாள். மருமகராகிய
ரிஷ்யஸ்ருங்கரும் உமக்கு புத்திரர்களை உண்டுபண்ணப்போகிறார்,’ என்று
ஸநத்குமாரரால் சொல்லப்பட்டது,
என்னால் உமக்கு
சொல்லப்பட்டது.’ இப்பொழுது தசரதர் ஆனந்தமடைந்தவராய் சுமந்த்ரரைப் பார்த்து
பதில்சொன்னார். ‘ரிஷ்யஸ்ருங்கர் அப்படி இருந்தும் எவ்விதமாய்
கொண்டுவரப்பட்டாரோ (அது) உம்மாலே விரிவாக
சொல்லப்படட்டும்.’”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஒன்பதாம் ஸர்க்கம்
முற்றிற்று ||
No comments:
Post a Comment